Sunday, December 28, 2014
Tamil Computer: ஆவாரம் பூ மருத்துவ குணம்
Tamil Computer: ஆவாரம் பூ மருத்துவ குணம்: நாம் நம்மிடம் இருக்கும் அருமையான எளிமையான இயற்கை மருந்து பொருட்களை புறம்தள்ளி பக்கத்து மாநிலத்துக்காரன் அதையே ஆயுர்வேதா ...
Tuesday, December 23, 2014
வலிப்போக்கன் : உழைப்பால் உயர்ந்த கொள்ளையர்கள்....!!!!
வலிப்போக்கன் : உழைப்பால் உயர்ந்த கொள்ளையர்கள்....!!!!: படம்- nellaionline.net 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் உழைப்பால் உயர்ந்த கொள்ளையர்கள் யாரென்று உங்களுக்கு தெரியுமா??...
Friday, November 28, 2014
குழந்தைகளின் நடனம்.
<div id="fb-root"></div> <script>(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/ta_IN/all.js#xfbml=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, 'script', 'facebook-jssdk'));</script>
<div class="fb-post" data-href="https://www.facebook.com/video.php?v=307664509394845" data-width="466"><div class="fb-xfbml-parse-ignore"><a href="https://www.facebook.com/video.php?v=307664509394845">இடுகையிடு</a> by <a href="https://www.facebook.com/mannacabs">MANNA TOURS & CABS</a>.</div></div>

Tuesday, September 16, 2014
கீரைகளின் மருத்துவ மகத்துவம்...
சில கீரைகளின் இயற்கை மருத்துவம்:-
* புதினாக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நாக்கில் சுவை உணர்வு அதிகமாகும். வாய் சுவையற்று இருந்தால் மாறிவிடும். வாந்தி போன்ற குமட்டல் நிற்கும். நல்ல பசியும் உண்டாகும். ரத்தத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சுத்தமாகும். வயிற்று பிரச்சினைகளும் தீரும்.
* அரைக்கீரை என்று அழைக்கப்படும் அறுகீரை காய்ச்சல், ஜன்னி, கபம், வாதம் போன்ற நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. ஆனால் வாயுக் கோளாறுகளை உண்டாக்கும்.
* முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து அதிகம். முருங்கைக் கீரையுடன் நெய் கலந்து, தினமும் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதி பெறும். ஆனால் புளி சேர்க்கக் கூடாது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.
* கண்களில் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் சிறுக் கீரையை சாப்பிட்டு வந்தால், கண்களில் உள்ள சிக்கல்கள் தீர்ந்து விடும். குறிப்பாக கண் புகைச்சல் நீங்கி, பார்வை பிரகாசமாகும்.
* கொத்துமல்லிக் கீரை நல்ல வாசனையை உடையது. தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். வாந்தி, குமட்டல் போன்றவை நிற்கும்.
* பசலைக் கீரையை, பசறைக் கீரை என்றும் சிலர் அழைப்பார்கள். இது அதிக சுவையை உடையது. அடிக்கடி தண்ணீர் தாகம் எடுப்பவர்களுக்கு, இந்த கீரையை கொடுத்தால் நாவறட்சியை தீர்க்கும்.
* பசி எடுக்காமல் இருப்பவர்களுக்கு வெந்தயக் கீரையை தொடர்ந்து கொடுத்து வந்தால் நன்றாக பசி எடுக்கும். உடல் ஆரோக்கியமாகும். கபம் மற்றும் வாயுக் கோளாறுகள் விலகும். அடிக்கடி வரும் இருமல் நீங்கும். நாக்கில் ருசி இல்லாமல் இருந்தால் மாறி சுவையுணர்வு ஏற்படும். வயிற்றில் ஏற்படும் உப்புசம் போன்றவற்றை நீக்கும். வாதம் மற்றும் காச நோய்களுக்கு வெந்தயக்கீரை மிகவும் நல்லது.
* வயது முதிர்ந்து நாடி, நரம்புகள் தளர்ந்து போனவர்களும், நடுத்தர வயதினரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய கீரை முளைக்கீரை. இந்தக் கீரை மிகவும் ருசியாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறுவர், சிறுமியருக்கும் முளைக்கீரை நல்லது. முளைக் கீரையை சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது.
* புளிச்ச கீரை என்றழைக்கப்படும் புளிப்புக் கீரையை அடிக்கடி சாப்பிடுவோருக்கு வாத நோய்கள் நீங்கும். ரத்தத்தில் உள்ள உஷ்ணம் மற்றும் சிக்கல்கள் தீர்ந்து, சுத்தமாகும். கரப்பான் என்றழைக்கப்படும் நோய் அகன்று விடும். பித்தம் தொடர்பான நோய்களும் தீரும். நாக்கில் சுவையுணர்வை அதிகரிக்க வைக்கும். வயிற்றில் உள்ள கோளாறுகளை நீக்கும்.
* காசினிக் கீரையை தினமும் சாப்பிடுவோருக்கு உடலுக்கு தேவையான தாதுக்கள் அதிகமாகும். உடம்பில் உள்ள உஷ்ணத்தை நீக்கும். மேலும் உஷ்ணம் தொடர்பான அனைத்து வியாதிகளையும் அகற்றும். உடம்பில் வீக்கம் இருந்தாலோ அல்லது கட்டி இருந்தாலோ குணமாகும்.
Monday, July 28, 2014
Wednesday, July 9, 2014
கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் !
கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் !: போத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...
கால்நடை தகவல் மற்றும் விற்பனை மையம் தமிழ்நாடு - Livestock Information and Sales Centre Tamil Nadu: வீட்டு தோட்டம் : கழிவு நீரை சுத்திகரித்தல்
கால்நடை தகவல் மற்றும் விற்பனை மையம் தமிழ்நாடு - Livestock Information and Sales Centre Tamil Nadu: வீட்டு தோட்டம் : கழிவு நீரை சுத்திகரித்தல்: வீட்டு தோட்டம் : கழிவு நீரை சுத்திகரித்தல் பாத்ரூம் கழிவு நீர், துணி துவைக்கும் தண்ணீரையும் சுத்திகரித்து தொட்டி செடிகளுக்கு ஊற்றலாம்...(...
Tuesday, July 8, 2014
Saturday, May 31, 2014
Sunday, May 4, 2014
Wednesday, April 23, 2014
அறிவோம் வரலாறு. நண்பர் Babu PK மூலமாக
இப்ப நான் ரெண்டு மூணு வரலாற்று மனிதர்களைப் பத்தி சொல்லப்போறேன். நேத்து திடீர்னு ஞாபகத்துக்கு வந்தாங்க... ஒரு இத்தாலிய புத்தகத்துல லேடி கொடிவாவைப் பத்தி பாத்தேன்.... (நல்லாக் கவனிங்க படிக்கலை... பாத்தேன்) அவங்களைப் பத்தி நெனச்சதுமே... எனக்கு அழகான நெஃப்ரடிடியும் ஞாபகத்துக்கு வந்தாங்க. நெஃப்ரடிடி வந்ததும், அவங்களோட வீட்டுக்காரரும் வந்துட்டாரு.
க்ளியோபாட்ராவும் ஞாபகத்துக்கு வந்தாங்க... ஆனா, அவங்களைப் பத்தி உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரிஞ்சுருக்கும். இவங்களைப் பத்தி ரொம்பப் பேருக்கு தெரிஞ்சுருக்காதுல்ல அதான்... இவங்களை லேசா கோடி காட்டுறேன்.... கபால்னு புடிச்சுக்கோங்க....
முதலாவது, லேடி கடைவெ (Lady Godiva). பழைய ஆங்கிலத்தில் Godgifu அல்லது Godgyfu என்று அழைக்கப்படுவார். நாம இங்கே கொடிவான்னு சொல்லுவோம்.
அது பதினோராம் நூற்றாண்டு. இன்றைய ஐக்கிய சாம்ராஜ்யத்தின் அந்தக்காலத்தைய இடம்தான் மெர்சியா (Mercia). ஸ்கான்டினேவிய பகுதிகளில் இருந்து பிரிட்டானியாவை ஆக்கிரமித்த ஜெர்மானியக் குழுக்களான ஆங்கிலோ-சாக்சன் இனத்தவர்களின் ஒரு சாம்ராஜ்யம். இவர்களே தற்போதைய ஆங்கிலேயர்களின் முன்னோர்.
அக்காலகட்டத்தில் மெர்சியாவை ஆண்டவன்தான் லியோஃப்ரிக், ஏர்ல் ஆஃப் மெர்சியா (Leofric, Earl of Mercia). ஏர்ல் என்பது ஒரு உயர் பதவி. லியோஃப்ரிக்கும் ஒரு சக்தி வாய்ந்த மனிதன். ஆனால் சற்றுக் கொடுங்கோலன். மக்கள் நலனை நினையாது கடுமையான வரிகளைச் சுமத்துவானாம்.
லேடி கொடிவாவோ மிகுந்த இரக்க குணம் உள்ளவள். தன் கணவன் மக்களை வரிகள் போட்டு வதைப்பது கண்டு பல முறை அவனுடன் வாதிட்டிருக்கின்றாள்... வரிகளைக் குறை, அதிகவரிகள் சுமத்தாதே என்று. அவன் கேட்கவே இல்லை. இவளும் விடுவதாக இல்லை.
ஒரு சமயம் இது காரணமா பெரிய விவாதம் போகவும், லியோஃப்ரிக்... சரி, நான் வரியைக் குறைக்கிறேன் ஆனா, அதுக்கு நீ உடம்புல ஒரு துணி கூட அணியாம நிர்வாணமா நகரத்து தெருக்களை குதிரையில சுத்தி வரனும். செய்வியான்னு கேக்க.
இவளும், கொஞ்சங்கூட யோசிக்காம சரி பண்றேன். ஆனா, அதுக்கப்புறம் இந்த மாதிரி செய்யக்கூடாதுன்னு வாக்கு வாங்கிக்கிட்டு... ஊர் மக்களுக்கெல்லாம் ஒரு அறிவிப்பு கொடுக்குறா. குறிப்பிட்ட தினத்தன்னைக்கு, குறிப்பிட்ட நேரத்துக்கு யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, ஜன்னல் கதவு எல்லாத்தையும் மூடிக்கிட்டு வீட்டுக்குள்ளேயேதான் இருக்கனும்னு.
அந்த நாள்ல, தன் உடம்புல ஒட்டுத் துணி கூட இல்லாம, தன்னோட நீண்ட கூந்தலை மட்டுமே மறைப்பாகக் கொண்டு, குதிரையில் ஒரே புறமாக இரண்டு கால்களையும் போட்டுக்கொண்டு நகரத்து தெருக்களை வலம் வந்தாளாம்.
பிற்பாடு இதன் காரணமா அதுக்கப்புறம் கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளுக்கு பெண்கள் குதிரையில் பயணிக்கும்போது ஒரேபுறமாக இரண்டு கால்களையும் போட்டு அமர்ந்து பயணிப்பதைத் தவிர்த்தாங்களாம். இந்தத் தியாகத்தின் காரணமா அவளோட கணவன் அதுக்கப்புறம் மக்களை கொடுமைப்படுத்தலையாம்.
ஆனா, அந்த மக்கள்ல... ஒரே ஒரு தையக்காரன், பேரு டாம் அவன் மட்டும் தன் வீட்டுக் கதவு ஓட்டை வழியா இந்த ராணியைப் பாத்துட்டான். அதுனால அவனுக்குப் பேரு, Peeping Tom. மறைந்து பார்க்கும் மோகப்பார்வை (Voyeurism)க்கு இவனைத்தான் முதல் உதாரணம் காட்டினார்கள்.
இது உண்மையல்ல வெறும் கதைன்னும் சொல்றாங்க. ஆனா, ராணி கொடிவா வாழ்ந்தது உண்மை. கொடிவா மூலமா ஒரு தியாக உணர்வும், டாம் மூலமா ஒரு உளவியல் அறிவும் உலகத்துக்கு தெரிய வந்துச்சு.
அடுத்து நெஃப்ரெட்டிரி (Nefretiti). எகிப்து சாம்ராஜ்யத்தின் பதினெட்டாம் வம்சத்தின் மிகப்பெரும் மன்னனான அகெனடன் (Akhenaten)ன் ராணிகளுள் ஒருவர். முழுப்பெயர் நெஃபர்னெஃபெராட்டன் நெஃப்ரெட்டிடி (Neferneferuaten Nefertiti).
எகிப்து மண்ணில் மிகப்பெரும் புரட்சிகளைச் செய்தவர்கள் இவர்கள் இருவரும். பலகடவுட்கொள்கைகள் பரவியிருந்த எகிப்தில் ஓரிறைக் கொள்கையைத் துணிந்து செயல்படுத்தியவர்கள்.
சரி, இதில் என்ன இருக்கு என்கிறீர்களா? எல்லாம் தெரிந்த வரலாறுதானே என்று சொன்னால், இந்த ராணியின் மார்பளவுச் சிலை ஒன்று நமக்குக் கிடைத்திருக்கின்றது. நீண்டகழுத்தும், வளைந்த புருவங்களும், சற்றே உயர்ந்த கன்ன எலும்புகளும், கூர்நாசியும், சிவந்த இதழ்கள் வெளிப்படுத்தும் மர்மப்புன்னகையும்... அடடா... மிக அழகான பெண்மணிதான்.
ஆனால், அவரது தலையையும் கவனிக்க மறந்து விடாதீர்கள். எகிப்திய தலை அலங்காரம் என்றுதான் எல்லோரும் நினைக்கின்றார்கள். நெப்ரெட்டிடியின் பிறப்பு குறித்து எவருக்கும் சரிவரத் தெரியவில்லை. யூகங்கள்தான் இருக்கின்றன.
மன்னரோ உலகின் முதல் தனிப்பெரும்ஆளுமை (First Individual) என்று போற்றப்படுகின்றார். மதரீதியாகப் புரட்சி செய்ததோடு மட்டுமல்லாமல், தொலைநோக்குப் பார்வையோடும் அறிவியல் நுணுக்கத்தோடும் திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர். சூரியனைக் குறித்து சற்று அறிந்து வைத்திருப்பவர். அதுவே உலகிற்கு சக்தி கொடுப்பதை உணர்ந்திருந்தவர்.
இவர்கள் இருவரின் தலையைப் பார்த்தால், இயல்புக்கு மாறாக சற்றே நீண்டிருப்பதைக் காணலாம். இது ஏதோ மரபணுப் பிழை என்றால், அவர்கள் அதிககாலம் உயிர்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே இவர்கள் இயல்பான மனிதர்களே அல்ல. வேற்றுக்கிரகவாசிகளாக இருக்க வேண்டும் அல்லது அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மனிதக் கலவையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகின்றது.

Sunday, March 30, 2014
காற்றோடை அல்லது காற்றுச் சறுக்கம்.
அறிவோம் அறிவியல் ( நண்பர் பாபு PK அவர்கள் முகநூலில் பகிர்ந்தது )
காற்றோடை (Jet Stream)
பூமி போன்ற கிரகங்களின் வளிமண்டலத்தில் காணப்படும் ஒரு விதமான காற்றோட்டம். காற்றோட்டம் என்று சொல்லி விட்டேன் ஆனால், சரியான சொல் அதுவல்ல.
ஆங்கிலத்தில் Wind Shear அல்லது Wind Gradient என்பர். காற்றுச் சறுக்கம் என்று சொல்லலாம் என்று கருதுகிறேன். இது ஒரு குறுகிய தூரம் மட்டுமே காணப்படும். இதனை vertical மற்றும் horizontal என்று இருவகையாகப் பிரிப்பார்கள்.
நம் காற்றோடை என்பது அப்படியான Vertical Shear. பக்கவாட்டு வெப்ப மாறுதல்களால் ஏற்படும் காற்றுச் சறுக்கல். பொதுவாக காற்று, மிகை அழுத்தப் பகுதியில் இருந்து குறை அழுத்தப்பகுதியை நோக்கிப் பாயும். அப்படிப் பாயும்பொழுது அங்கே, Coriolis (இதனைக் குறித்து சுருக்கமாகத் தேடிப்படித்துவிடுங்கள்) விசையொன்று செயல்படும். அது நம் காற்றுச் சறுக்கலை மேலும் கீழுமாக, அதாவது புவியின் வட மற்றும் தென் துருவமாக அலைக்கழித்து ஒரு sine அலையைப் போன்ற அமைப்பைத் தரும். இதனை Meandering அமைப்பு என்பார்கள்.
இது நம் வளிமண்டலத்தின் Troposphereக்கும் Stratosphereக்கும் இடையே இருக்கும் ஒரு திருப்பப்பகுதியான Tropopause பகுதியில் நிகழும். புவியின் முக்கியமான காற்றோடை எதுவென்றால் மேற்கத்திய காற்றுதான். அதாவது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வீசும் காற்று. இக்காற்றோடையானது, இரண்டு மூன்று அல்லது பல்வேறு கிளைகளாகப் பிரியலாம், பிரிந்து ஒன்றாகச் சேரலாம், அப்படியே கலைந்தும் போகலாம், பல்திசைகளிலும் வீசவும் செய்யலாம்.
கடல்மட்டத்திலிருந்து ஏறக்குறைய 7 முதல் 12 கிலோமீட்டர் உயரத்தில் வீசும் துருவக்காற்றோடை(polar jet)தான் மிக சக்தி வாய்ந்தது. அதற்குச் சற்று வலுக்குறைந்த Subtropical jet கடல் மட்டத்திலிருந்து 10 முதல் 16 கிலோமீட்டர் உயரத்தில் வீசும்.
இக்காற்றோடை உருவாவதற்கான காரணம், புவிச்சுழற்சியும், சூரியக்கதிர்வீச்சால் வளிமண்டலத்தில் ஏற்படும் வெப்பமாறுபாடும் ஆகும். வேறுசில கிரகங்களில் அக்கிரகத்தின் உள்வெப்பமும் ஒரு காரணமாக அமையக்கூடும்.
இதுல ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு என்னன்னா, இந்தப்பக்கம் விமானத்துல பறக்குற விமானிகள் இந்தக் காற்றோடைகளில் தங்கள் விமானத்தை திறம்பட நுழைத்து தங்களின் எரிபொருளையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவார்கள். டர்புலன்ஸ் சற்று அதிகமாகத்தான் இருக்கும். எல்லா விமானிகளும் அப்படிச் செய்வதில்லை.
1883ல் இந்தோனேஷியாவின் Krakatoa எரிமலை வெடித்ததற்குப்பின் பல வருடங்களாக காலமாறுபாட்டைக் கணிக்கும்பொழுது பல தகவல்களைச் சேகரித்துப் பதிந்துள்ளார்கள். அதில் ஒரு சம்பவத்தை அவர்கள் Equatorial Smoke Stream என்று ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
1920ல் ஜப்பானின் ஃப்யூஜி எரிமலைக்கு அருகே ஒரு காற்றோடையைக் கண்டுபிடித்தார். 1933ல் உலகைத் தனியாக வலம் வந்த அமெரிக்க விமானி Wiley Post, இந்தக் காற்றோடைகளை கண்டுபிடிக்க பேருதவியாக இருந்திருக்கின்றார். இவர் அதிஉயரப் பறக்கும் விமானத்தில் பல முறை முயற்சி செய்து, தன் விமானத்தின் தரைவேகம், வளிவேகத்தை விட அதிகரிப்பதைக் கண்டு கொண்டார். அதிலிருந்து காற்றோடை இருப்பதை உறுதி செய்துகொண்டார்.
1939 முதல் 1945 வரையிலான இரண்டாம் உலக யுத்தத்தின் போதுதான் இக்காற்றோடை குறித்து நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. காரணம், ஒரே பாதையிலான, அடிக்கடியிலான விமானப் பயணங்கள். இக்காற்றோடையைப் பயன்படுத்தி பறந்தார்கள்.

Friday, March 28, 2014
Monday, March 10, 2014
Wednesday, March 5, 2014
நம்மவூர் குலசை : Home made Mosquito Repellent
நம்மவூர் குலசை : Home made Mosquito Repellent: by er_sulthan » August 20th, 2013, 7:35 am
Monday, March 3, 2014
Sunday, February 23, 2014
தமிழின் அருமை.
தமிழ்க் கடலில் முத்தெடுப்போம்...
தமிழில் ஏராளமான இலக்கியங்கள் உள்ளன. உங்கள் வாழ்நாள் முழுமையையும் இலக்கியம் வாசிக்கத் தயார் என்று காலவரிசைப்படி எடுத்து அமர்வீர்கள் என்றால் உங்களுக்கு ஆயுள் போதாது. அதுவுமில்லாமல் அந்தந்த இலக்கியச் செல்வங்களில் மூழ்கி முத்தெடுக்க முனையும்போது, அதன் இனிமைக்குள் மயங்கி, கடந்து செல்வதை மறந்துவிடுவீர்கள்.
திருக்குறளைக் கடந்து வருவதற்கே உங்களுக்கு ஓராண்டு தேவைப்படலாம். ஒவ்வொரு குறளும் புதிது புதிதாகப் பொருள் விளக்கமாகிக்கொண்டே இருக்கும். அண்மையில் நான் திருக்குறளுக்கு உரையெழுதும் பணியில் ஈடுபட்டிருந்தபோது என்னை நாள்கணக்கில் நிறுத்தி வைத்த குறள்கள் பல.
‘பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ நம் பெண்மை உடைக்கும் படை’ என்ற குறளைக் கண்டதும் நான் திகைத்துப் போய்விட்டேன். இந்தக் குறள்கள் அடிக்கடி எடுத்தாளப்பெற்று நமக்குப் பழக்கமாகியிருக்கவில்லை.
‘பல மாயங்கள் புரிகின்ற கள்வன், திருடன் இவன். அதற்கெல்லாம் பெண்ணாகிய நாம் அஞ்சமாட்டோம். யாம் நற்குணங்கள் என்னும் கோட்டையைக் கட்டி எழுப்பி அதில் அரசியாக வீற்றிருக்கிறோம். இவன் இங்கே வந்து என்ன செய்துவிட முடியும் ? ஏதேனும் சிறுபொருள் திருடிச் செல்லமுடியும். என் சிறு கவனத்தைக் கவரமுடியும். மற்றபடி என்னைக் கவர்ந்துவிட முடியுமோ இவனால் ? ஆனால், எத்தனை தூரம் பணிந்து இணக்கமாக இழைவாகப் பேசுகிறான் ? அந்தப் பணிந்த மொழிகள் என் பெண்மை என்னும் கோட்டையை உடைத்துவிடும்போல் உள்ளனவே. கோட்டையைக் கொத்தி உடைக்கிறானே, அது ஒன்றல்ல இரண்டல்ல படைகளாய்ப் பெருகித் தாக்குகின்றனவே’ என்று பொருள் விரியும்போது நான் வியந்து அமர்ந்துவிட்டேன். எண்ணி எண்ணி மகிழ்ந்துகொண்டிருந்தேன்.
அதுபோல்தான் தமிழில் உள்ள இலக்கியங்கள் எல்லாமே. அவை பழைய கள். உன்மத்தத்தின் அளவை அளக்க இதுகாறும் அளவுமானி எதுவும் தோன்றவில்லை.
அதனால்தான் பாரதிதாசன் தமிழின் அருமையை இவ்வாறு பாடியிருக்கிறார்.
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.
தமிழின் பழைமையைக் கருத்தில்கொண்டு திரும்பினால் எண்ணற்ற இலக்கிய வகைகள் இருக்கின்றன. சங்கப் பாடல்கள், ஐம்பெருங்காப்பியங்கள், கம்ப இராமாயணம், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், சித்தர் பாடல்கள், தனிப்பாடல்கள் என அவை ஏராளம்.
சங்கப் பாடல்களை உங்கள் வாழ்வில் கற்பதற்கு வாய்த்தால் அது பெரும்பாக்கியம். ஒவ்வொரு பாடலையும் அணு அணுவாகப் புரிந்துகொள்ளும்போது உங்களுக்குள் ஏற்படும் தெளிவு வேறுவகை. ஐம்பெருங்காப்பியங்களைக் கற்றீர்கள் என்றால் எண்ணற்ற நிலங்களின் வழியே இரண்டாயிரமாண்டுப் பழந்தமிழர்களோடு வாழ்ந்துவிடுவீர்கள். கம்ப இராமாயணத்தைப் படித்துத் தமிழின் முழுமையை உணரலாம். அற இலக்கியங்களைப் பயின்றால் இத்தனை நீதிகளை வகுத்துக்கொண்ட, இந்த மொழி மாந்தர்கள் வழியில் நாமும் தோன்றியிருக்கின்றோமா என்ற செம்மாப்பு தோன்றும். தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று’ என்று பாடிய மரபை உடையவர்களாயிற்றே நாம். தனிப்பாடல்களில் இல்லாத சுவையே இல்லை எனலாம். இன்றெல்லாம் யாருக்காவது சிலேடை என்றால் என்னவென்று தெரியுமா என்று அஞ்சுகிறேன். தனிப்பாடல்களில் காணப்படும் காளமேகப் புலவர் தமிழின் பெரும்புலவர்களில் ஒருவர்
கத்துக் கடல்சூழ் நாகைக் காத்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசிவரும் - குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்
-என்று சிலேடையாகப் பாடிய வரிகள் நினைவுக்கு வருகின்றன. பிச்சை பெற்று அன்னம் உண்கின்ற இடத்தில் எழுந்த கோபத்தை அடக்கமாட்டாமல் இருபொருள்படப் பேசிய அப்புலவன் யாருக்கும் தலைவணங்கியிருக்கமாட்டான் என்றே நம்புகிறேன்.
எப்படிப் பார்த்தாலும் தமிழ் மரபில் ஆயிரக்கணக்கான புலவர்கள் செய்யுள் எழுதியிருக்கிறார்கள். நம் கைவசம் இலட்சக்கணக்கான பாடல்கள் உள்ளன. பல இலட்சக்கணக்கான பாடல்களைக் காலத்தின் கறையானிடம் தின்னக் கொடுத்தபின்னும் நமக்கு மீதமிருப்பவற்றை வாசித்து அடங்க ஒருவனின் ஆயுள் போதாது என்றால் நம் செல்வங்களின் பேரளவை நினைத்துப் பார்க்கலாம்.
இவற்றில் ஒரு பிரிவாகச் சிற்றிலக்கியங்கள் உள்ளன.
இலக்கியம் என்றால் இலக்கியம்தான், அதிலென்ன சிற்றிலக்கியம் பேரிலக்கியம் ? ஒருபொருள் சார்ந்து - அதைத் தமிழில் துறை என்கிறார்கள் – இயன்றவரை விரிவாக அல்லது முடிந்தவரை சுருக்கமாக இலக்கணம் வகுத்த வழியின்படி பாடிச் செல்கின்ற இலக்கியங்கள் அவை. வாய்ப்பாட்டாகப் பாடி முடிக்கும்போது ஓரமர்வில் ஒருபொழுதில் தொடங்கி அடங்குகிற இலக்கிய வடிவம்.
தாலாட்டுப் பாட்டு இருக்கிறது, பிள்ளை தூங்கியபின்பு யாராவது பாடுவார்களா ? ஒப்பாரிப் பாட்டு இருக்கிறது, செத்து சவ அடக்கம் செய்து 16 நாள்கள் கழிந்த பின்னால் யாராவது ஒப்பாரி வைத்துக்கொண்டு இருப்பார்களா ? அம்மாதிரிதாம் சிற்றிலக்கியங்களும்.
அந்தக் காலங்களில் அதற்கு நிகழ்கலைத் தன்மை இருந்திருக்கிறது. ‘பாடுய்யா பார்ப்போம்’ என்று வள்ளல்கள் சொல்ல, புலவர் பாடியிருக்கிறார். அப்படிப் பாடும்போது ‘அட... வீணாப் போனவரே.. விளங்காமப் போனவரே’ என்றா பாடமுடியும் ? நீர் நல்லவர், வல்லவர், நடையழகர், சிரிப்பழகர் - என்றெல்லாம் பாடிப் பரிசில் வாங்கிச் செல்வர்.
புகழ்வது, ஒன்றில் ஏற்றிப் பாடுவது, கற்பனைக்கு மொழி வடிவம் தருவது - அந்தக் காலத்தில் அருமையான செயல். இன்றைய நிலைமையை வைத்தெல்லாம் இதை இழிந்துபேச முடியாது என்பதே என் கருத்து. பால்ய விவாகத்திலிருந்து விடுபட்டதும், உடன்கட்டை ஏறும் வழக்கை ஒழிக்கப் பாடுபட்டதும் நம் காலத்துக்குச் சற்று முந்திதானே நடந்தன ? அப்படிப் பாடப்பட்டவை சிற்றிலக்கியங்களாக நம்முன் கிடக்கின்றன.
இறைவனை அரசனை மற்றும் சக மனிதர்களை அவர்களின் செந்தகைமை வியந்து பாடியிருக்கின்றார்கள். அதில் பாடப்பெற்றுள்ள தகைமையுடையவர் நிச்சயமாக வாழ்ந்திருப்பார் என்றே நம்புகிறேன். அதில் வருகின்ற ஊரும் இயற்கையும் தாவரங்களும் விலங்குகளும் காடுகளும் நிலங்களும் அதே செழுமையோடு குன்றாத வளத்துடன் இருந்திருக்கும் என்றே நம்புகிறேன். நாம் வாழ்கின்ற இந்தக் காலத்திலேயே மழை பொழிகின்றது என்னும்போது அந்தக் கால வாழ்வு அப்படியொன்றும் இழிந்ததாக இருந்திருக்காது. அதில் இலங்குகின்ற தமிழும் பண்பாட்டுத் தகவல்களும் மிகமிக முக்கியமானவை.
தமிழில் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு உள்ள சிக்கல் என்னவென்றால் பழந்தமிழ் இலக்கியங்களோடு அவர்களுக்கு எந்தப் பரிச்சயம் இல்லை. அதிகபட்சம் திருக்குறள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. பத்திருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் நிலைமை இப்படியில்லை. சுஜாதா சங்க இலக்கியங்களுக்கு உரையெழுத முயன்றார். ஜெயகாந்தன் கம்பனைப் பற்றி மிகச் சிறப்பாக அறிந்தவர். கடைசியில் இன்றெழுதப்படுகிற கவிதைகளைக்கூட யாரும் படிப்பதில்லை என்னும் நிலைமை வந்துவிட்டது.
நாஞ்சில் நாடன் இதற்கு விதிவிலக்காகத் திகழ்கிறார். அவர் தேர்ந்துள்ள புனைகதை மற்றும் வாழ்வியற்கூறுகளை விவரிக்கும் கட்டுரையுலகுக்கு இது முற்றாக வேறானதுதான். இதையெழுதும் நேரத்தில் ஒரு நாவலை எழுதிப் புகழ் சம்பாதிக்கும் செயலில் அவர் இறங்கியிருக்கலாம். இத்தனைக்கும் ஒரு நாவல் எழுதுவதைக் காட்டிலும் அதிக உழைப்பைக் கோருகிற பணி இது. 98க்குப் பின்பாக அவர் புதினம் எதையும் எழுதியதாகத் தெரியவில்லை. ஏதேனுமொரு நற்செயலை இந்தச் சமூகத்திற்கு உருப்படியாகச் செய்து தரவேண்டும் என்று ஆசையுற்றதால்தான் இத்தகைய முயற்சியிலேயே ஈடுபட்டிருக்கவேண்டும். இந்தக் காரணத்திற்காகவே அவரை அவர் ஆசைப்படுவதுபோல அழைக்கக் கடமைப்பட்டுள்ளோம். நாஞ்சில் நாட்டு வீரநாராயண மங்கலத்து ஓரேர் உழவர் ஸ்ரீ கணிபதிபிள்ளை மகனார் நாஞ்சில் நாடனார்.
பழந்தமிழ் இலக்கியங்களைப் படிப்பது கடும்பணி. அதற்கு முறையான பயிற்சி வேண்டும். நானும் படிக்கிறேன் என்றெல்லாம் படித்துவிடமுடியாது. பிடிபடாது. மறைமலை அடிகள் சொல்வதுபோல் பதின்பருவத்திலிருந்தே தொல்காப்பியத்தோடும் திருக்குறளோடும் மனனப் பயிற்சி இருக்கவேண்டும். அப்பொழுதுதான் பழந்தமிழ்ப் பிரயோகங்கள் உங்களை வெளித்தள்ளாமல் உள்ளிழுத்துத் தம் அழகுகளைக் காட்டும்.
நாஞ்சில் நாடனுக்கும் இளமை முதல் பழந்தமிழ் இலக்கியங்களோடு ஆழ்ந்த வாசக நெருக்கம் இருந்திருக்கிறது. புனைகதை உலகில் இயங்கிக்கொண்டே அவற்றோடு நல்லுறவு பேணியிருக்கிறார் என்பதற்கான எல்லாத் தடயங்களும் இந்நூலில் உள்ளன. இல்லாவிட்டால் இதில் மூழ்கி முத்தெடுக்க முடியாது. ஒவ்வொரு நூலாகத் தேடிச்சென்று, நண்பர்களின் நூலக அடுக்குகளைத் தூசியெழத் தட்டி, ஒவ்வொருவருவரிடத்திலும் வாய்விட்டுக் கேட்டுப் பெற்று அவற்றை மெனக்கெட்டு வாசித்துப் பொருள் புரிந்து - இந்த நூலை எழுதியிருக்கிறார். தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் குறித்துத் திரண்ட தகவல்களோடு நிரல்பட எழுதப்பட்ட ஒரே நூல் என்று இதைத்தான் கூற வேண்டும்.
தமிழ் இலக்கணப் பத்திகளை நான் இணையத்தில் எழுதுவதுண்டு. இதெல்லாம் நம் வேலையில்லை, தகுதிவாய்ந்த புலவர்கள் பண்டிதர்கள் எத்தனையோ பேர் இருக்க, நமக்கெதற்கு இந்த வேலை என்று கருதியிருந்தேன். ஆனால், இதைச் செய்வதற்குக் கூட தகுதிவாய்ந்த உரிய நபர்கள் இல்லை என்பதை உணர்ந்தபோதுதான் நம் முன்னோர்கள் நம்மிடம் பொறுப்பை வழங்கிச் சென்றுவிட்டார்கள் என்பதையே உணர்ந்தேன்.
நாஞ்சில் நாடன் அஞ்சுவதுபோல் அவர் படித்த கலம்பகமும் சதகமும் அந்தாதியும் பிள்ளைத்தமிழும் பள்ளுவும் மறு அச்சுக்கு வாய்ப்பில்லாதவை என்றே கருதுகிறேன். அவற்றையெல்லாம் மின்பிரதிகளாக இணையத்தில் ஏற்றிச் சேமித்து வைக்கவேண்டும் என்று என் யோசனையைத் தெரிவிக்கிறேன். அதற்கு யாரேனும் அரசோ, பல்கலைக் கழகமோ, புரவலரோ நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும். கைவசமுள்ள நூல்களைப் படியெடுத்து இணையத்தில் ஏற்றவேண்டும். அதிகபட்சம் இதற்குச் சில மாதங்கள் தேவைப்படலாம். மனம் வேண்டும் என்பதுதான் முக்கியம் !
(கடந்த பிப்ரவரி 22, 2014 அன்று ஈரோடு வாசிப்பு இயக்கம் நடத்திய பனுவல் போற்றுதும்’ நிகழ்ச்சியில் நாஞ்சில் நாடன் எழுதிய ‘சிற்றிலக்கியங்கள்’ என்னும் நூல் குறித்து நான் ஆற்றிய உரை).
வழிகாட்டுபவர் :https://www.facebook.com/magudeswaran.govindharajan/posts/676271952411297
Thursday, February 20, 2014
சக்திவேல் பாலசுப்ரமணியன் - புதிய உலகம் செய்வோம்: உங்கள் சிந்தனைக்கு......
சக்திவேல் பாலசுப்ரமணியன் - புதிய உலகம் செய்வோம்: உங்கள் சிந்தனைக்கு......: நம்பக்கூடாதது..... வதந்தி.. சொல்லக்கூடாதது...... கடன்.. செய்ய வேண்டியது..... உதவி.. நழுவ விடக்கூடாதது.... வாய்ப்பு.. உயர்வுக்கு வழி...
Monday, February 3, 2014
தமிழ் அமுதம்.
திருவிளையாடல்.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.
(குறுந்தொகை-2; திணை : குறிஞ்சித்திணை; எழுதியவர் : இறையனார்)
தலைவன் தலைவியிடையே ஒரு சமயம் புணர்தல் தற்செயலாக, வெகு இயல்பாக முதல் முறை நிகழ்ந்து விடுகின்றது. அதற்குப் பின் அவர்கள் கூட வாய்ப்பு அமையவேயில்லை. சில காலம் சென்று மீண்டுமொருமுறை அப்படி ஒரு வாய்ப்பு அமைகின்றது. ஆனால், கடந்த முறை நிகழ்ந்த நிகழ்வு நினைவிற்கு வந்து தலைவியால் தலைவன் முகத்தை பார்க்கக் கூசி நாணத்தால் தலை கவிழ்ந்து தள்ளி நிற்கிறாள்.
அவள் நாணத்தைப் போக்கிட அவளைத் தொடவேண்டும். இதனை மெய் தொட்டுப் பயிறல் என்பர். என்ன காரணத்தைச் சொல்லி அவளைத் தொடுவது? தலைவன் சொல்கிறான், அவளது கூந்தல் நறுமணம் கொண்ட பூவைப் போன்று இருக்கின்றதாம். அதனையும் கற்பனைவளம் சேர்த்துச் சொல்கிறான். ஒரு வண்டு அவளது கூந்தலை மொய்க்க வருகின்றதாம். அதனிடம் அவன் கேட்பது போல்...
தேடிப் பல மலர்கள் சென்று தேர்ந்து தேன் உண்ணும் அழகிய சிறகுகளை உடைய வண்டே, நான் கேட்கிறேன் என்பதற்காக, என் விருப்பத்திற்காகச் சொல்ல வேண்டாம், உள்ளதை உள்ளபடியே சொல். இவள் பல பிறவிகளிலும் என்னுடன் இணைந்தே இருப்பவள். மயில் போன்று அழகானவள். (மயிலின் தோகையைப் போன்ற கூந்தலைக் கொண்டவள்.) இடைவெளியற்ற சீரான நெருக்கமான அழகான பற்களை உடையவள். என் காதலி. அவளின் கூந்தலைப் போன்று நறுமணம் வீசக்கூடிய மலரை நீ எங்காவது இருக்கின்றது என்று அறிந்ததுண்டா..?
என்று கேட்டவாறே, அந்த வண்டை விரட்டுவது போன்று பாவனை செய்து அவளது கூந்தலைத் தொட்டுத் தடவிப் பின் அவளை அணைக்கிறான். நாணம் விலகிட அடுத்த புணர்தல் நிகழ்கின்றது. தலைவியின் நலத்தைப் பாராட்டிப் பாடுவது போலமைந்திருப்பதைப் போன்றே திருக்குறளிலும் நலம் புனைந்துரைத்தல் என்று ஒரு அதிகாரமே இருக்கின்றது. அதனைப் பின்பொரு முறைச் சுவைப்போம்.
அருஞ்சொற்பொருள்:
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
கொங்கு - தேன்
தேர் - ஆராய்ந்து, தேர்ந்து
அஞ்சிறை - அழகிய சிறகுகள்
தும்பி - வண்டு
தேர்ந்து தேனுண்ணும் வாழ்க்கையையுடய, அழகிய சிறகுகளை உடைய வண்டே,
காமம் செப்பாது கண்டது மொழிமோ
காமம் - விருப்பம்
செப்பாது - சொல்லாது
மொழிமோ - சொல்வாயாக
எனது விருப்பத்திற்காகச் சொல்லாது கண்டதை மட்டுமே சொல்வாயாக.
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
பயிலியது கெழீஇய - பல பிறவிகளிலும் என்னோடு இணைந்திருந்த
மயிலியற் - மயில் போன்ற இயல்பினள்
பலபிறவிகளிலும் என்னோடு இணைந்தே வருபவள் இவள், மயிலின் சாயலைக் கொண்டவள்,
செறி எயிற்று அரிவை கூந்தலின்
செறி எயிற்று - செறிவான நெருங்கிய பற்களைக் கொண்ட
அரிவை - பெண்
கூந்தலின் - கூந்தலைப் போன்ற
செறிவான நெருங்கிய பற்களைக் கொண்டு இந்தப் பெண்ணின் கூந்தலைப் போன்ற
நறியவும் உளவோநீ யறியும் பூவே
நறியவும் - நறுமணம் உள்ளதுமான
உளவோ - இருக்கின்றதோ?
நறுமணம் உள்ளதுமான பூ ஏதும் இருக்கின்றதோ நீ அறிந்தவரையில்?

இந்தப் பாடலைத்தான், திருவிளையாடல் என்ற திரைப்படத்தில் மதுரை மன்னன் செண்பகப்பாண்டியனின் சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக சிவபெருமான் தருமிக்கு எழுதிக்கொடுத்த பாடலாகப் பயன்படுத்தியிருப்பார்கள்.
இப்ப நம்ம பக்கத்துக்கு வருவோம்...
இந்தச் சிவபெருமான் சரியான குசும்பு பிடிச்சவருங்க. (என்னைய மாதிரியே) பாட்டையும் தப்பா எழுதிக்கொடுத்துட்டு... கேட்டா அதைச் சமாளிக்கிறதுக்காக... உம் தமிழுடன் விளையாடவே யாம் வந்தோம்னு டகால்டி விடுறது... அதுக்கு முன்னாடி, என்னாமா... வசனம் பேசிச் சண்டை போடுவாரு...
நடந்தது நடவாதது, அறிந்தது அறியாதது, தெரிந்தது தெரியாதது, பிறந்தது பிறவாதது, இறந்தது இறவாதது என அனைத்தையும் யாம் அறிவோம். எல்லா....ம் எமக்கு தெரியும்...னு சொன்னதை அப்டீயே மெயிண்டைன் பண்ணிருவாரு... செம கில்லாடிங்க அவரு...
படம் எடுக்கப்பட்ட தளம் : http://www.guna thamizh.com/2010/01/blog-post_24.html

Wednesday, January 29, 2014
Avargal Unmaigal: மோடி செய்யும் மோடிமஸ்தான் ' வேலைகள்
Avargal Unmaigal: மோடி செய்யும் மோடிமஸ்தான் ' வேலைகள்: #மோடியின் புளுகு மூட்டைகளை தோழர் நரேன் ராஜகோபாலன் ஆதாரத்தோடு நிரூபித்து வருகிறார்...மோடி குறித்தான ஊடகங்களின் பம்மாத்துகளுக...
Saturday, January 25, 2014
கருத்துப் பரிமாற்றம்....
கண்ணனின் கின்னஸ் சாதனை
என்னைக் கவர்ந்த நண்பர் Babu PK அவர்களின் சிந்தனைகள்.
தனிமதி என்பாரின் பதிவு:
கண்ணனின் கின்னஸ் சாதனை
கின்னஸ் புத்தகம் இருக்கிறது. ''அரை மணி நேரத்தில் ஆயிரம் இடியாப்பம் சாப்பிட்டு சாதனை படைத்தேன், ஐந்தே நிமிடத்தில் அரைப்பானை ஐஸ்கிரீமை வயிற்றில் அடைத்து விட்டேன்,'' என்றெல்லாம் அதில் எழுதச் சொல்கிறார்கள். சாதனை செய்பவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே! ஆனால், கடவுளின் சாதனையின் முன் நம் சாதனைகள் வெறும் தூசு தான். யார் அந்தக் கடவுள் தெரியுமா? வெண்ணெய் திருடி, மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நமது கண்ணன் தான்.
குரு�க்ஷத்திர யுத்தம் போல இனியொரு யுத்தம் நடக்கப்போவதில்லை. யுத்தகளம் என்றால் சாதராண இடமல்ல அது. 70மைல் நீளம், 30மைல் அகலமுடையது அந்தக்களம். இந்தக்களத்திலே தான் ஒரு நொடியை ஐந்தாகப் பிரித்து அதன் நான்கு பகுதிக்குள் 18 அத்தியாயங்கள், 700 ஸ்லோகங்கள் கொண்ட பகவத்கீதையை சொல்லி முடித்தார். பகுத்தறிவுள்ள யாராவது ஒருவன் இதை நம்புவானா எனக் கேட்கலாம்.
இதன் உட்பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும். கேட்பவன் சரியானவனாக இருந்தால், சொல்லிக் கொடுப்பவனுக்கு கவலையில்லை. ஆசிரியர் சொல்லித்தரும் பாடத்தை முதலிலேயே கவனித்து விட்டால், வீட்டில் வந்து படிக்கவே தேவையில்லை. அப்படியே மனதில் ஆகி விடும். அது போலத்தான் அர்ஜூனன். அவன் மிகப் பெரிய ஞானி. அந்த ஞானியின் ஞானத்தை கண்ணன் தூண்டி விடுவதற்கான நேரமே இது.மிக இலகுவாக கண்ணனின் கருத்துக்களை புரிந்து கொண்டான். போரில் வெற்றியும் பெற்றான்.
உணவு எளிதில் ஜீரணமானால் மனிதனின் உடல்நிலை நன்றாக இருக்கும். இதனால் தான் பீமனுக்கு 'விர்க்கோதரன்' என்ற பெயர் உண்டு. 'விர்க்கோதரம்' என்றால் 'எளிதில் ஜீரணமாகுதல்' எனப் பொருள். ஜீரணமாகி விட்டால் உடலில் அதிக பலம் ஏற்படும். அதுபோல புரிந்து கொள்ளும் தன்மை அதிகமாக உள்ளவர்களே வாழ்வில் வெற்றி பெறுவார்கள். இதனால் தான் அதீத புத்தியுள்ள அர்ஜூனனை தேர்ந்தெடுத்து கண்ணன் கீதையை உபதேசித்தான்.
கீதையில் இல்லாத கருத்துக்களே இல்லை. முக்கியமாக கீதை பயத்தை போக்குகிறது.
''உன் குடும்பத்தோடு ஒட்டும் உறவும் வைப்பதால் தான், உனக்கு பயமே ஆரம்பமாகிறது என்கிறது கீதை. நீ பிறக்கும் போதே நிச்சயிக்கப்பட்ட மரண தேதியுடன் தான் பிறந்து வந்துள்ளாய். எனவே, ஒருநாள் நீ உன் சுற்றத்தாரை விட்டு பிரியத்தான் போகிறாய். அவர்களைப் பிரிந்து விட்டால், உன் குடும்பமே தெருவுக்கு வந்து விடுமோ என பயப்படுகிறாய். இந்தக் கவலையை ஒழிக்கும் பக்குவம் கிடைக்குமா? நிச்சயம் கிடைக்கும். நீ பகவானை மட்டுமே தியானம் செய். போதும். என்னை விட்டு விடாதே,'' என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
''குதஸ்த்வா கஸ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்!அனார்யஜூஷ்டமஸ் வர்க்யப கீர்த்தி கரமர்ஜூன!!''
என்பது கீதையில் பகவான் சொல்லும் ஸ்லோகம்.
இதன் பொருள் என்ன தெரியுமா?
''அர்ஜூனா! பாமரர்களால் மேற்கொள்ளத்தக்கதும், சொர்க்கத்தின் கதவை அடைப்பதும், அபகீர்த்தியை தருவதுமான மோகத்தை எங்கிருந்து நீ பெற்றாய்?'' என்பது தான்.
மோகத்தை விட்டுவிடு, பாசத்தை வேரறுத்து விடு, பணத்தின் மீது பற்று வையாதே,'' இதுதான் பகவான் கிருஷ்ணன் சொல்லித் தரும் பாடம். முயற்சி செய்யுங்களேன். கீதையின் இந்த வரிகளைப் பின்பற்ற.
'கஸ்மாலம்' என்றால் என்ன? : பகவத்கீதையின் இரண்டாவது அத்தியாயம் இரண்டாவது ஸ்லோகத்தில், 'கஸ்மல' என்ற வார்த்தை வருகிறது. 'கஸ்மலம்' என்றால் 'மோகம்' என்று பொருள். இந்த வார்த்தை திரிந்து 'கஸ்மாலம்' ஆகிவிட்டது. நமது சென்னை மக்கள் இதை, 'திட்டும்' வார்த்தையாக பயன்படுத்துகிறார்கள். 'மோகம் கொண்டவனே' என்று இதற்கு பொருள்.
தை அமாவாசை தீர்த்தங்கள்: தை அமாவாசை வரும் 21ம் தேதி வருகிறது. தீர்த்தம் ஆட ராமேஸ்வரம், வேதாரண்யம், கன்னியாகுமரி ஆகிய தலங்களுக்கு அடிக்கடி சென்று வந்திருப்பீர்கள். இம்முறை தாமிரபரணியின் நீர் வீழ்ச்சிகளான கல்யாணி தீர்த்தம், பாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களுக்கு சென்று வாருங்கள்.
பாண தீர்த்தம்: தாமிரபரணியின் முதல் தீர்த்தமான பாணதீர்த்தம் வானத்தில் இருந்து விழுவதைப் போன்ற தோற்றமுடையது. எனவே இதை வான தீர்த்தம் என்றும் சொல்வர். அம்பிலிருந்து புறப்பட்ட பாணம் போல் அருவி கொட்டுவதால் இப்பெயர் ஏற்பட்டது. இங்கிருந்து 2 கி.மீ.,தொலைவில் சொரிமுத்தையனார் கோயில் உள்ளது. சாஸ்தா கோயில்களில் இதுவே முதன்மையானது என்பர். தாமிரபரணி ஆற்றின் நடுவே கோயில் உள்ளது. கோயிலைச் சுற்றி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இங்கு, தை மற்றும் ஆடி அமாவாசைகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவர். சிறப்பு பூஜைகள் உண்டு. இங்கு தர்ப்பணமும் செய்யலாம்.
கல்யாணி தீர்த்தம்: பாபநாசத்திலுள்ள லோயர்டேம் எனப்படும் நீர்மின்நிலையப் பகுதியை ஒட்டி, கல்யாணி தீர்த்தம் அமைந்துள்ளது. இதைக் கண்டு களிக்க மண்டபம் கட்டப்பட்டுள்ளது. வெள்ள காலங்களில் இந்த அருவி பார்ப்பதற்கு மிக பயங்கரமாக இருக்கும். இதை பார்த்தாலே பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை.
மனிதனுக்குள் உயர்வு தாழ்வு இல்லை என்ற கருத்தை உலகோருக்கு வலியுறுத்த, சிவபெருமான் தனது திருமணத்தின் போது உலகை ஒருபுறமாக சரியச் செய்தார். இந்த ஏற்றத்தாழ்வை போக்க, அகத்தியர் பொதிகைக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு திருமணக்காட்சி கொடுத்த இடமே கல்யாணி தீர்த்தம்.
அகத்தியர் அருவி: கல்யாணி தீர்த்தத்தின் தண்ணீர் அடர்ந்த பாறைகளைக் கொண்ட ஆற்றின் வழியே சென்று, அகத்தியர் அருவி என்ற பெயரில் விழுகிறது. இந்த அருவியில் மக்கள் ஆபத்தின்றி குளிக்கலாம. அமாவாசை தர்ப்பணத்தை இந்த அருவிக்கரையில் செய்து வருவது மிகவும் சிறப்பு.
பாபநாசம் படித்துறை: தாமிரபரணி நதியில், கங்கை ஆண்டில் ஒருமுறை வந்து மூழ்குவதாக பாபநாசம் தலபுராணம் சொல்கிறது. பாபநாசம் பாபநாசநாதர் கோயிலில், சித்திரை முதல் நாள் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்படுகிறது. பாவங்களைச் சுமந்து வரும் கங்கை, தாமிரபரணியில் தனது பாவத்தை தொலைத்துக் கொள்கிறது என்பது ஐதீகம். பாபநாசத்திலுள்ள பாபநாசநாதர் சிற்பம் ருத்ராட்சத்தால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இவரை வணங்கினால், ஆன்மிக உணர்வு அதிகரிக்கும். நோய்கள் நீங்கும்.
செல்லும் முறை: சென்னை, மதுரை, கோவையிலிருந்து செல்பவர்கள் திருநெல்வேலி சென்று, அங்கிருந்து 45 கி.மீ., தொலைவில் உள்ள பாபநாசத்தை ஒன்றரை மணி நேரத்தில் அடையலாம். பாபநாசத்தில் இருந்து அமாவாசையை ஒட்டி சிறப்பு பஸ்கள் அகத்தியர் அருவி, கல்யாணி தீர்த்தம், சொரிமுத்தையன் கோயில் வரை செல்லும். இங்கிருந்து 2 கி.மீ., நடந்தோ, பஸ்களிலோ, காரையார் செல்லலாம். இங்கு தாமிரபரணி அணை இருக்கிறது. அணைக்குள் செல்லும் படகுகளில் சென்றால், பாண தீர்த்தத்தை அடையலாம். இங்கு ஓரமாக நின்று நீராட கம்பித் தடுப்பு உண்டு. மிகக்கவனமாக நீராடி விட்டு, காரையாரில் இருந்து புறப்படும் பஸ்களில் பாபநாசம் திரும்பலாம். பாபநாசம் பாபநாசநாதர் கோயில் முன்பு தாமிரபரணியில் கம்பித்தடுப்பு எல்கைக்குள் நின்று, மிகக்கவனமாக நீராடி விட்டு, தர்ப்பணம் முடித்து ஊர் திரும்பலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான்:எனது கருத்துக்கள் பல்வேறு வகைகளில் மாறுபடுகின்றன இங்கு. ஆனால் பதிவதற்குத் தயக்கமாக உள்ளது. எனது வார்த்தைகள் பண்புடன் இருந்தாலும், மற்றவர்களின் அடிப்படை, ஆழ் நம்பிக்கைகளைச் சற்று அசைத்துப் பார்க்கும் என்பதால் யாரும் விரும்ப மாட்டார்கள். ஆயினும், நான் முன்பே குறிப்பிட்டவாறு பிளேட்டோவின் குகைமனிதனாக இருப்பது கடினம். ஆன்மிகத்தைப் பரப்புவது சரி எனில், பகுத்தறிவைப் பரப்புவதும் சரியாகத்தான் இருக்கவேண்டும்.
கண்ணனின் சாதனைகளை நாம் செய்ய முற்பட்டால் இந்தச் சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமா?திருடுதல் சாதனையா? யாரோ ஒருவன் நம் வீட்டுப் பெண்களை கோபிகைகளாகக் கருதிச் சீண்டினால் நாம் பொறுத்துக்கொள்வோமா?
மகாபாரதத்தைப் பொறுத்தவரை கண்ணன் முரண்பாடுகளின் மொத்த உருவமாகத் தெரிகின்றான். தான் ஒருபக்கமும் தன் படை மறுபக்கமும் இருந்து போரிடுவது எங்ஙனம்? கீதையின் தான் கூறுபவற்றைக் கிஞ்சித்தேனும் தனது வாழ்வில் கடைபிடித்தேனாயின் இல்லை.
குருட்சேத்திர யுத்தம் என்று ஒன்று நிகழ்ந்ததா என்பதே சந்தேகத்திற்குரியது.18 அக்குரோணிப் படைகள் நின்றதாகக் கூறப்படுகின்றது,ஒரு அக்குரோணி (Akshauhini) என்பது21,870 இரதங்கள்,21,870 யானைகள்,65,610 குதிரைவீரர்கள்109,350 காலாட்படையினர்.
ஒரு இரதத்திற்கு இருவர் எனக்கொண்டால்,
21,870 x 2 = 43,740 நபர்கள்
ஒரு யாணைக்கு இருவர் எனக் கொண்டால்,
21,870 x 2 = 43,740 நபர்கள்
ஒரு குதிரைக்கு ஒரு வீரன் எனக் கொண்டால்
65,610 x 1 = 65,610 நபர்கள்
109,350 காலாட்படை நபர்கள்,
ஆக மொத்தம்,
43,740 + 43,740 + 65,610 + 109,350 = 262,440 நபர்கள்,
18 அக்குரோணி படைக்கு 262,440 x 18 = 4,723,920 நபர்கள்.
இவர்கள் யுத்தத்தில் பங்கெடுத்தவர்கள் மட்டுமே, இவர்களுக்கு உதவி செய்ய இன்னும் பலர் இருந்திருப்பர், யுத்தத்தில் பங்கெடுக்காதோரும் இருந்திருப்பர், பெண்கள் குழந்தைகளும் இருந்திருப்பர், நாட்டு மக்களும் இருந்திருப்பர் என்று கணக்கெடுத்துப் பார்த்தால் அக்காலத்தில், அதாவது மகாபாரதம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் காலத்தில் இவ்வளவு மக்கள் தொகை இருந்திருக்குமா?
குருட்சேத்திரம் என்பது இத்தனை நபர்களைக் கொண்ட படையணிகளை நிறுத்தும் அளவிற்குப் பெரிய திடலா?
கேள்விகள் நம் சிந்தனைக்கே....
அது என்ன சொல்லிவைத்தமாதிரி பெரும்பாலான ம(ட)த நூல்கள் எல்லாம் ஒரு விடயத்தைச் சொல்வதற்கு முன்பாகவே, இது உங்களுக்குப் புரியாது, அல்லது மிகுந்த அறிவிருந்தால் மட்டுமே புரியும், அல்லது கடவுள் மீது முழு நம்பிக்கை இருந்தால்தான் புரியும் என்று சொல்லுகின்றனவே....?
எனக்கு ஒரு திடைப்படக் காட்சி நினைவிற்கு வருகின்றது. தமிழின் நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்கள் ஒரு திரைப்படத்தில், கடவுளைக் காட்டுவதாகக்கூறி ஊர்மக்களிடம் பணம் வசூலித்துவிடுவார். ஒரு மலையைக் காட்டி அதோ கடவுள் தெரிகிறார் என்றதும் ஊர் மக்கள் விழிப்பார்கள். எவனெவன் மனைவி பத்தினியோ அவன் கண்களுக்கு மட்டுமே கடவுள் தெரிவார் என்றும் கூறிவிடுவார். உடனே எல்லோரும் ஆம் எனக்கு கடவுள் தெரிகிறார் என்று கூவுவார்கள். வேறு வழி...?
கீதையைப் படியுங்கள் பின் பெருமை பேசுங்கள், படிக்காமல் பெருமை பேசுதல் வேண்டாமே. கண்ணனின் வாழ்க்கை வரலாறாகக் கூறப்படுவதை முழுமையாகப் படியுங்கள். பின்னர் அவன் பெருமை பேசலாம்.
அது என்ன தர்ப்பணம்? நாம் அந்தணர்க்கு கொடுக்கும் பண்டங்கள் நமது முன்னோர்களுக்குப் போய்ச்சேருவதாக அர்த்தமா? என் தாத்தா என்னைச் சிறுவயதில் நன்றாக அடிப்பார். இப்பொழுது நான் அவரை அடிக்க விரும்பினால் அந்தணர்களை அடித்தால் என் தாத்தாவிற்குப் போய்ச் சேருமா?
ஒரு கதாகாலட்சேபம், உன் சகோதரிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் உனக்கு மரணம் என கம்சனுக்கு அசரீரி ஒலித்ததாம், அதனால் தன் சகோதரியையும் அவளது கணவரையும் சிறையில் தள்ளி, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைக் கொன்றுவிட ஆணையிட்டான் கம்சன் என்று ஒருவர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
அங்கிருந்த சிறுவன் ஒருவன் கேட்டானாம், "அதுதான் எட்டாவது குழந்தையால் மரணம் என்று தெரிந்துவிட்டதே, பின்னும் ஏன் அவர்கள் இருவரையும் ஒன்றாகச் சிறையிலடைத்தான் கம்சன்?"
அவன் காதைத் திருகி, அதிகப்பிரசங்கி என்ற வசைமொழியோடு வீட்டிற்கு அனுப்பியிருப்பார்கள்.
அச்சிறுவன் கேட்டதுபோல் இன்று நாம் யாரும் கேட்பதில்லையே ஏன்?
தசாவதாரம் என்றொரு திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் நாயகன் ஒரு கருத்துச் சொல்வார், "கடவுள் இல்லை என்று கூறவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் நானும் கூறுகிறேன்" என்பார். நாம் எல்லோருக்கும் நம் அடிமனதில் ஒரு தனியாத இச்சை ஒன்று உண்டு. திடீரென்று ஒரு அதிசயம் நிகழ்ந்து நாம் உலகப் புகழ் பெறமாட்டோமா என்றோ அல்லது ஓரிரவிலேயே உலகப் பணக்காரராக மாறிவிடமாட்டோமா என்று பல.
எனக்கும்கூட ஒரு பெரிய ஆசை (பேராசை?!) ஒன்றுண்டு. ஓரிரவில் உறங்கி விழிக்கும்பொழுது இப்பிரபஞ்சத்தின் அத்துணை இரகசியங்களும் என் மூளைக்குள் பொதிந்து வைக்கப்படமாட்டாதா என்று...
ஆனால், அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தோமானால் நாம் எதார்த்த வாழ்விற்கு திரும்பிவிடலாம். அல்லது ஒருவித மயக்கத்தில் ஆழ்ந்து கடவுள், அருள், சக்தி என்று நமக்கு நாமே பல தோற்றங்கள் கற்பித்துப் பின் அதனையே உண்மை என நம்பி விடும் சாத்தியக்கூறுகள் அதிகம்.
எனது சிறுவயதில் என்னைச் சிறப்பித்துக்கூறும் வகையில் ஒரு பொய்யை ஒரு நண்பனிடம் கூற, அதை அவன் இன்னும் சிலரிடம் கூற, அவர்கள் என்னிடம் வந்து உண்மையா எனக் கேட்க, நானும் முதலில் கூறிய பொய்யை மறைக்க ஆம் என்று கூறி அதனை உண்மைப்படுத்தும் வகையில் இன்னும் சில பொய்களைக் கூற, இறுதியில் நான் முதலில் கூறிய பொய் உண்மையாகவே நிகழ்ந்ததாக என் மனம் எண்ண ஆரம்பித்துவிட்டது. (மிகப்பெரிய வாக்கியமாக அமைந்துவிட்டது போலும்...)
இப்பொழுது நினைத்தால் கூட அதனை எண்ணி வெட்கப்படுகின்றேன். ஆக மனித மனம் மிகவும் மென்மையானது அதே சமயம் மிகவும் வன்மையானது. இருபக்கம் கூர்மையுள்ள கத்தி போன்றது. மிகக் கவனமாகக் கையாள வேண்டியிருக்கின்றது.
தாங்கள் கூறும் கிருட்டிண பக்தர் மாற்றுக்கருத்துக்கள் தருவாராயின் மிக்க மகிழ்ச்சியடைவேன். அவர் போற்றும் கீதை கூறும், மாற்றம் ஒன்றே தன் இயல்பில் மாறாதது (Paradox-முரண்தொடர்) எல்லாவற்றிற்கும் பொருந்துமா எனவும் வினவவும்.
சுகந்தி:
வணக்கம் பாபு.
நான் நினைக்கிறேன் நீங்கள் ஒரு இந்து சமயத்தவர் என்று. காரணம் நான் பார்த்தளவில் மற்ற சமயத்தவர்கள் எப்போதும் தமது சமயத்தை விட்டுக் கொடுத்துப் பேசியதில்லை. பகுத்தறிவு விஞ்ஞான வளர்ச்சி எல்லாம் சொல்லலாம். ஆனாலும் மனிதனால் பூகம்பம் நில நடுக்கம் சுனாமி இவைகளைத் தடுக்க முடியவில்லையே. நாளை என்ன நடக்கும் என்று அறிய முடிவதில்லையே. படிக்கும் போது ஒன்றை நினைத்துப் படிக்கிறோம்.ஆனால் வேறு ஒரு துறையில் வேலை பார்க்கிறோம்.நம் முன்வினைப் பயன்கள் கூட நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.அதனால் தான் நல்லதையே செய் ,நல்லதையே நினை என்பதை அடிக்கடி வலியுறுத்துகின்றன.ஒன்றை வாசிக்கும் போது நாம் எடுக்கும் கோணத்தைப் பொறுத்தது.
அரிச்சந்திரன் கதையை ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தாராம். அதன் நோக்கம் உண்மையே பேசுங்கள் என்பது.ஆனால் ஒரு மாணவன் சொன்னானாம் இப்படி கஷ்டப்பட்டதை விட பேசாமல் அவர் ஒரு பொய்யைச் சொல்லியிருக்கலாம் என்று.நான் நினக்கிறேன் மக்களை நல்ல வழியில் கொண்டு செல்லவே இது போல பல கதைகள் உருவாக்கப்பட்டதென்று.எங்கே எதைப் படித்தாலும் எமக்குத் தேவையான, உடன்பாடான விடையங்களை எடுத்துக் கொண்டு மற்றவற்றை விட்டு விடலாம்.
பகுத்தறிவு என பலர் சிந்திக்கத் தொடங்கியதால் தான் இன்று பல குடும்பங்கள் விவாகரத்தில் வந்து நிற்கின்றன.
நான்:
பார்த்தீர்களா சுகந்தி... நமது பார்வைகளை.....
அடுத்தவரை நாம் புரிந்துகொள்ளாததற்கு, நாம் அவரை ஏதேனும் ஓர் இடத்தில் இருத்திவைத்துப் பார்ப்பதும், இவர் இப்படித்தான் போலும் என்ற பார்வையில் பார்ப்பதுமே ஆகும்.
நான் தேநீர் அருந்துவதில்லை என்று கூறினேனானால், நான் தேநீர் அருந்துவதில்லை என்பது மட்டுமே நான் தங்களுக்கு வெளிப்படுத்தும் கருத்து. தாங்களாகவே நான் குளம்பிதான் (Coffee) அருந்துவேன் என்றோ அல்லது அருந்தக்கூடும் என்றோ கற்பனை செய்துகொள்வது எவ்விதத்தில் நியாயம்?
நான் பகுத்தறிவு குறித்துப் பேசுவதால் என்னை நாத்திகன் என்று கருதி அதே பார்வையில் பார்ப்பதையோ, இந்து மதத்தின் குறைபாடுகளைக் குறித்துப் பேசுவதால், அம்மதத்தவர்க்கு எதிரானவன் என்று கருதுவதையோ நான் விரும்பவில்லை.
எந்த அடையாளங்களையும் சுமப்பதில் எனக்கு உடன்பாடில்லை, நான் தமிழன் என்பதைத் தவிர. எனக்கு விருப்பமின்றியே, என் சமுதாயமும், அரசாங்கமும் என்னைச் சான்றிதழில் ஒரு சமயத்தவனாகக் குறித்துள்ளதே தவிர, நான் ஒரு சிறந்த மனிதானகவே வாழ்ந்து மடிய ஆசைப்படுகின்றேன்.
//நான் பார்த்தளவில் மற்ற சமயத்தவர்கள் எப்போதும் தமது சமயத்தை விட்டுக் கொடுத்துப் பேசியதில்லை//
சமயமே பொய் என்கின்றேன், இதில் விட்டுக்கொடுப்பது என்பது எங்ஙனம்?
காவி தரித்தவன் கடவுளில்லை, பகுத்தறிவாளன் என்போன் இயற்கையை வெல்லும் விஞ்ஞானியுமல்ல. இயற்கையை வெல்ல முடியவில்லை என்பது எதார்த்தம், நீங்கள் கூறும் கடவுள் என்றாவது அவ்வியற்கையின் போக்கை மாற்றியதாக வரலாறு கண்டீரா? பின் எங்ஙனம் பகுத்தறிவாளன் அச்செயலைச் செய்திருக்கவேண்டும் என எண்ணுகிறீர்?
//நாளை என்ன நடக்கும் என்று அறிய முடிவதில்லையே. படிக்கும் போது ஒன்றை நினைத்துப் படிக்கிறோம்.ஆனால் வேறு ஒரு துறையில் வேலை பார்க்கிறோம்.நம் முன்வினைப் பயன்கள் கூட நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.அதனால் தான் நல்லதையே செய் ,நல்லதையே நினை என்பதை அடிக்கடி வலியுறுத்துகின்றன.//
இயலாமை, விரக்தி, அறியாமை, குழம்பியதோர் சிந்தனை இவைகளை தங்கள் கூற்றுக்களில் காண்கின்றேன். ஆனாலும் வரவேற்கின்றேன், குழம்பிய நீரே தெளிவடையும்.
உலகின் உயிரினங்கள் அனைத்திற்கும் ஒரு பொதுவான அடிப்படையான குறிக்கோள் என்னவெனில், உயிர்வாழ்தல்(Survival), தன்னினத்தைப் பெருக்குதல்(Reproduction) என்பனவாம். மனிதர்களாகிய நாமும் இவற்றைய அடிப்படையாகக் கொண்டாலும், வெளியில் சிலபல பூச்சுக்களைக் கொண்டுள்ளோம், தவிர நாமும் ஒரு விலங்கினம்தான்.
நமது நடவடிக்கைகள், அது நல்ல வழியினதானாலும் சரி, தீய வழியினதானாலும் சரி, உயிர்வாழவேண்டிய தேவை கருதியே அமையும். இது மனிதனுக்கு மனிதன் வேறுபடவும் செய்யும். உயிர் வாழ ஒருவன் கொலை செய்யலாம், ஒருவன் திருடலாம், ஒருவன் உழைக்கலாம், ஒருவன் ஏய்க்கலாம்.... அடிப்படையில் எல்லாமே உயிர் வாழத்தான்.
மற்றபடி, முன்வினைப்பயன், பின்வினைப்பயன் என்பதெல்லாம் நமது செயல்களை நியாயப்படுத்திக்கொள்ளவும், நான் குற்றமற்றவன் என்பதைக் காட்டிக்கொள்ளவும்தான். கடவுள் கூற்று கூட அப்படித்தான். எந்தவொரு தவறான விளைவுகளுக்கும் பொறுப்பேற்க நாம் விரும்புவதில்லை, அது நம்மால் விளைந்திருந்தால்கூட. எனவேதான், கடவுள் மீதும், விதியின் மீதும் சுமத்திக்கொள்கிறோம். அவர்கள் நேரில் வந்து கேள்வி கேட்க இயலாது அல்லவா?
என்னைக் கேட்டால், அரிச்சந்திரன் ஒரு உண்மையான மனிதனாக இருந்திருப்பானாயின் அவனை ஒரு முட்டாள் என்றே கூறுவேன். தன் நிலை இழந்து, மனைவி மகனை விற்று, தான் உண்மையை மட்டுமே பேசுவேன் என்பது தனது தன்மூப்புத்தனத்தைக் (ego) காட்டுவதற்காகத்தானே அன்றி வேறொன்றுமில்லை.
கவனியுங்கள், அரிச்சந்திரன் வாழ்க்கை ஒரு புனைவாகக்கூட இருக்கலாம். புனைந்தவரின் சுய ஆதாயத்திற்கு நீங்கள் பலியாகிவிடாதீர்கள். உண்மை பொய் என்பது நிலையானது அல்ல, அது காலத்திற்கும், இடத்திற்கும், மனிதர்க்கு மனிதரும் வேறுபடும்.
"தன்னெஞ்சறிவது பொய்யற்க" என்பதே போதுமானதாகும். கண்ணால் காணாத அரிச்சந்திரனை நீங்கள் புகழ்வதாக இருந்தால் கண்ணால் காணும் என்னையும் புகழத்தான் வேண்டும். நான் பொய் பேசுவதில்லை, பொய் பேசுவதில்லை என்றால் பொய் பேசுவதில்லை என்று மட்டுமே பொருள்.
//பகுத்தறிவு என பலர் சிந்திக்கத் தொடங்கியதால் தான் இன்று பல குடும்பங்கள் விவாகரத்தில் வந்து நிற்கின்றன.//
வேடிக்கையாக இருக்கின்றது. பகுத்தறிவு பேசாத குடும்பங்களில் விவாகரத்தே இல்லை என்கிறீர்களா அல்லது விகிதம் குறைவாக இருக்கிறது என்கிறீர்களா?
சுகந்தி:
வணக்கம் பாபு. திரும்பவும் சில மாற்றுக் கருத்தோடு வந்திருக்கிறேன்.
//சமயமே பொய் என்கின்றேன்.//
சமயமே பொய் என்றால் ஏன் உலகெங்கும் ஆயிரக்கணக்காக கோயில்கள் ,தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் கட்டி வைத்திருக்கிறார்கள்.உங்கள் பெற்றோரும் பொய் என்றுதான் சொல்கிறார்களா?
//இயலாமை, விரக்தி, அறியாமை, குழம்பியதோர் சிந்தனை இவைகளை தங்கள் கூற்றுக்களில் காண்கின்றேன்.//
நான் நிறைய இந்திய சஞ்சிகைகள் படித்திருக்கிறேன். அதில் பட்டப் படிப்பு படித்து விட்டும் வேலை கிடைக்காமல் இருப்பவர்களைப் பற்றி வாசிக்கும் போது கவலையாக இருக்கும்.எவ்வளவு எதிபார்ப்போடு ஆவலுடன் படித்திருப்பார்கள்.
//முன்வினைப்பயன், பின்வினைப்பயன் என்பதெல்லாம் நமது செயல்களை நியாயப்படுத்திக்கொள்ளவும்.//
முன்வினைப் பயன் என்று ஒன்று இல்லாவிட்டால் ஏன் ஒரு குழந்தை ஒரு நேரப் பாலுக்கே வசதியில்லாமலும் இன்னொரு குழந்தை மித மிஞ்சிய பாலுடன் வசதியாக இருக்கும் இடத்தில் பிறக்கிறது. அதன் காரணம் என்ன? எல்லா உயிர்களும் சமமாகத் தானே பிறக்க வேண்டும்.சில குழ்ந்தைகள் பிறக்கும் போதே தாயோ அல்லது தந்தையோ இறந்து விடுகிறார்கள். அதுபோல் சில குழந்தைகள் பிறந்ததும் அந்த குடும்பத்திற்கு மள மளவென்று செல்வம் குவியத் தொடங்கி விடும்.
//பகுத்தறிவு பேசாத குடும்பங்களில் விவாகரத்தே இல்லை என்கிறீர்களா அல்லது விகிதம் குறைவாக இருக்கிறது என்கிறீர்களா?//
விகிதம் மிக மிக குறைவாக இருக்கிறது.
காரணம் எமது முன்னோர்கள் எப்போதும் பெண்களே விட்டுக்கொடுத்துப் போக வேண்டும் என்று கூறுவார்கள்.பெண்களும் கூடுமானவரை அதையே பின்பற்றினார்கள். குடும்பங்களில் பிரச்சனைகள் குறைவாகவே இருந்தது.பகுத்தறிவு என்று பார்க்கும் போது அதில் நியாயம் இல்லைதான்.ஆணும் பெண்ணும் சரிசமம். ஆனால் யதார்த்தம் அதுவல்லவே.
நான்:
வணக்கம் சுகந்தி, மாற்றுக் கருத்துக்களுடன் வரும் எவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
சமயம், கடவுள் குறித்து எனது பெற்றோர் பொய் என்று என்னிடம் சொல்லியதில்லை என்பதால் அவற்றை மெய்யெனக் கொள்வது எப்படிச் சரியாகும். எனது பிராயத்திலிருப்பவர்களுக்கும் எனக்குமே சிந்தனையில் பெருத்த வேறுபாடுகள் இருக்கும்பொழுது,சற்றுக் காலத்தே பின்னால் இருக்கும் என் பெற்றோருக்கு என் காலத்தைய சிந்தனை இருக்க வாய்ப்பில்லை. மேலும், அவர்களது பெற்றோர்கள் அவர்களுக்குரைத்த மொழிகளை மீறும் துணிவும் இல்லாதிருக்கலாம். எது எப்படியோ, சிந்தனை என்பது தனித்த ஒன்று, என் பெற்றோர் வழியில் சிந்திப்பதென்றால் நான் என்கின்ற என் தனித்த நினைவுக்குப் பொருளென்ன?
பட்டப்படிப்பு படித்துவிட்டும் வேலைகிடைக்காமல் இளைஞர்கள் இருப்பதற்கு சமூகக் காரணங்கள், அரசின் தவறான சில கொள்கைகளுமாகக் கூட இருக்கலாம். இதற்கெல்லாம் விதியைத் துணைக்கழைத்தால் எப்படி சுகந்தி...?
வசதியான இடத்தில் பிறப்பதும், வசதியற்ற இடத்தில் பிறப்பதும், மனிதர் பிறப்பதும், இறப்பதும் இயல்பான விடயங்கள். இது முன்வினைப் பயனால்தான் எனக் கூற எந்த ஆதாரமும் இல்லையே...? சரி, முன்வினைப்பயன் என்பதற்காவது ஏதேனும் சரியான, தெளிவான விளக்கம் உள்ளதா?
//பகுத்தறிவு பேசாத குடும்பங்களில் விவாகரத்தே இல்லை என்கிறீர்களா அல்லது விகிதம் குறைவாக இருக்கிறது என்கிறீர்களா?
விகிதம் மிக மிக குறைவாக இருக்கிறது//
ஆகா, மாட்டிக்கொண்டீர்களா சுகந்தி...! இதற்காகத்தான் அந்தக் கேள்வியையே கேட்டேன். எப்படிக் கணக்கெடுத்தீர்கள்? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் இங்கு செல்லாது என்பது தெரியும்தானே?
பெரும்பாலும் விவாகரத்து என்பது செருக்கு (கல்விச் செருக்கோ அல்லது செல்வச் செருக்கோ) கொண்ட நபர்கள் ஒன்றிணைக்கப்பட்டால் விளைவது என்று எனது அனுபவத்தில் கண்ட கருத்தாகத் தாழ்மையுடன் பதிவு செய்கின்றேன். இதில் ஆண் பெண் என வேறுபாடுகள் கிடையாது.
நம்மிடம் எவ்வளவுக்கு எவ்வளவு கல்வியும் செல்வமும் சேர்கின்றதோ அதே அளவிற்குப் பணிவும் சேரவேண்டும். இல்லையெனில் கடினம்தான்.
எல்லோர்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.(குறள்-125)
என்பது உட்பட அடக்கமுடைமை என்ற அதிகாரத்தில் கூறப்பட்டவைகள் அனைத்தும் நம் வாழ்க்கைக்குத்தாம்.
ஆக, தாங்கள் சிந்திக்கின்றீர்கள் ஆனால் ஒருமுகமாக. அதில் கிடைக்கும் விடைகளே போதுமானது எனத் திருப்திபட்டுக் கொள்கிறீர்கள். ஆனால், பன்முகமாக சிந்திக்கும்பொழுது குழப்பங்களோடு மிகத் தெளிவான விடை கண்டடைவீர்கள்.
காஞ்சி சங்கராச்சாரியார் வாழ்வில் நடந்ததாக ஒரு குட்டிக்கதையொன்று படித்திருக்கின்றேன். மக்களுக்கு வழங்குவதற்காக லட்டுகள் தயாரித்து ஒரு அறையின் மையத்தில் குவித்து வைத்திருந்தனர். குறைந்தது இரண்டு நாட்களாவது அதனை மக்களுக்கு வழங்க காத்திருக்க வேண்டும் என்றொரு சூழ்நிலை. நிர்வாகிகளுக்கோ கவலை. எறும்புகள் வந்து மொய்த்துவிடுமே என்று. சங்கராச்சாரியார் கூறினாராம், அந்த லட்டுக் குவியலைச் சுற்றி சர்க்கரையைத் தூவிவிடுங்கள் என்று. இனிப்பின் வாசனைக்கு வந்த எறும்புகள் அந்தச் சர்க்கரையோடு நின்றுவிட்டனவாம். அதற்குப் பின் இருக்கும் லட்டு அவற்றின் சிந்தனையை எட்டவில்லையாம். நாமும் அதுபோல்தான் இருக்கின்றோம். வாழ்வின் சின்னச் சின்ன விடயங்களில் திருப்திபட்டுக்கொள்கின்றோம், அதற்குப் பின்னால் இருக்கும் பெரிய விடயங்கள் நமக்குத் தெரிவதில்லை என்று எடுத்துச் சொல்கின்றார். உண்மைதானே?
சுகந்தி:
வணக்கம் பாபு,எனது சில கேள்விகளை முன்வைக்கிறேன்.
//வசதியான இடத்தில் பிறப்பதும், வசதியற்ற இடத்தில் பிறப்பதும், மனிதர் பிறப்பதும், இறப்பதும் இயல்பான விடயங்கள். இது முன்வினைப் பயனால்தான் எனக் கூற எந்த ஆதாரமும் இல்லையே...?//
நீங்கள் சொல்வது போல் முன்வினைப் பயனால்தான் எனக் கூற எந்த ஆதாரமும் இல்லைத்தான். ஆனால் ஒரு குழந்தை புதிதாகப் பிறக்கும் போது வசதியான இடத்தில் பிறப்பதும், வசதியற்ற இடத்தில் பிறப்பதிற்குமான காரணம் என்ன? ஏன் இந்த ஓரவஞ்சனை? பிறக்கும் போது வசதியான இடத்தில் பிறப்பதும், வசதியற்ற இடத்தில் பிறப்பதும் யாரால் நிர்ணயிக்கப்படுகிறது.
//பட்டப்படிப்பு படித்துவிட்டும் வேலைகிடைக்காமல் இளைஞர்கள் இருப்பதற்கு சமூகக் காரணங்கள், அரசின் தவறான சில கொள்கைகளுமாகக் கூட இருக்கலாம். இதற்கெல்லாம் விதியைத் துணைக்கழைத்தால் எப்படி சுகந்தி...?//
பட்டப்படிப்பு படித்துவிட்டும் வேலைகிடைக்காமல் இருக்கும் இளைஞர்கள் ஏன் இந்தியாவில் பிறக்க வேண்டும். மேலை நாட்டில் பிறந்திருந்தால் கை நிறைய சம்பளத்துடன் வாழ்ந்த்திருக்கலாமே? இதை என்னவென்று சொல்லலாம்.அதைத்தான் விதி என்கிறோம்.
//விவாகரத்து என்பது செருக்கு (கல்விச் செருக்கோ அல்லது செல்வச் செருக்கோ) கொண்ட நபர்கள் ஒன்றிணைக்கப்பட்டால் விளைவது//
நான் பார்த்தளவில் நல்ல கல்வியறிவு செல்வம் உள்ளவர்கள் நல்ல பணிவுடன் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். நீங்களும் சந்தித்திருப்பீர்கள்.உண்மையான கல்வியறிவு மனிதனின் வாழ்வை வளப்படுத்தும்.செருக்கை ஏற்படுத்தாது.
நான்:
சரி சுகந்தி,
நான் இதுவரை இம்முற்றத்தில் எனது சிந்தனையின் ஒரு முகத்தைத்தான் பதிவிட்டிருப்பேன், மற்றுமொரு சிந்தனை முகமும் உண்டு. அதில் நீங்கள் கேட்கும் கேள்விகளைப் போன்று பல கேள்விகள் எனக்குள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டுதான் இருக்கின்றன. முதல் முகம் விளைவுகளுக்கு எல்லாம் காரணம் தேடும், மறுமுகம் காரணம் என ஒன்று இருக்கின்றது எனக் கொண்டு அதனால் விளையக்கூடிய விளைவுகளைச் சிந்திக்கும்.
உங்களின் ஏன் ஏன் என்ற அந்தக் கேள்விகளுக்கு அது தான் இயற்கை என்றோ அல்லது அது அப்படித்தான் என்றோ பதில்கூறி நழுவி விட விரும்பவில்லை. அதற்கான விடையைத்தான் தேடிக்கொண்டிருக்கின்றேன். படைப்பில் ஏன் இந்த ஏற்றத்தாழ்வுகள்? இதனால் யாருக்கு என்ன பலன்? நாம் எதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றோம்? நாம் யார்? நமது குறிக்கோள்தான் என்ன? ஏன் நாம் எல்லோரும் மகிழ்ச்சியாக இல்லை? அடுத்தவரின் இன்பம் நம்மிடம் ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு, மற்றவரின் துன்பம் நம்மைப் பற்றிக்கொள்வதில்லையே ஏன்?
இவற்றிற்கெல்லாம் பகுத்தறிவு பதில் சொல்லிவிடாது. அதற்காக விதி, கடவுள் என்றொரு மடமையிலும் விழுந்து விடலாகாது. சிந்தனை, சிந்தனை அது ஒன்றுதான் விளக்கமளிக்கும் என்ற நம்பிக்கையில் சென்று கொண்டிருக்கின்றேன். கணித மேதை இராமானுசன் அவர்களுக்கு கணிதவிளக்கங்கள் கனவில்தான் வருமாம். ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ் (John Forbes Nash) என்பாருக்கும் யாரோ ஒருவர் கணிதவிளக்கம் தருவதாக ஒரு காட்சிப்பிழை தோன்றுமாம்(Hallucination). ஐன்ஸ்டைன் கூட Thought Lab என்று ஒரு பதம் குறிப்பிடுகிறார்.
மேலும் நான் எங்கோ யாரோ ஒருவர் கூறியதாகப் படித்த ஓர் செய்தி. நாம் இதுவரை கண்டுபிடித்த கண்டுபிடிப்புக்களெல்லாம் எங்கோ ஒரு இடத்தில் (Mind Space) இருந்தவைதானாம். இதுபோல் இன்னும் நிறைய இருக்கலாமாம். ஆனால் அவையெல்லாம் எல்லோருக்கும் தங்களைக் காட்டிக்கொள்வதில்லையாம். ஆப்பிள் கீழே விழுவது குறித்து யாரும் சிந்திக்கவில்லை, நியூட்டன் சிந்தித்ததில்விளைவாக புவியீர்ப்பு விசை தன்னை அவருக்குக் காட்டிக்கொண்டதாம். எனக்கும்கூட அப்படியொரு சிந்தனை உண்டு. அவ்வகையில் ஒருவேளை எனக்கும் விடை கிடைக்கலாம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயலும்போது எனக்குப் பைத்தியக்காரன் என்றொரு பெயரும் மக்களிடையே இருக்கலாம்...
நிலா முற்றத்தில் 2010 பிப்ரவரி மாதத்தில் ஒரு பதிவினைத் தொடர்ந்து அமைந்த கருத்துப் பரிமாறல்கள்..
Thursday, January 23, 2014
பகுத்தறிவோம்
பகுத்தறிவோம்
13 பிப்ரவரி 2013 இல் 12:34 AM
என்னைக் கவர்ந்த நண்பர் Babu Pk அவர்களின் உரத்த சிந்தனையின் வெளிப்பாடு.
என்னைக் கவர்ந்த நண்பர் Babu Pk அவர்களின் உரத்த சிந்தனையின் வெளிப்பாடு.
நிலா முற்றம் (www. thamilworld.com) என்ற தளத்தில் 18.02.2010 அன்று நண்பர்களுக்காகப் பதிவிட்டது.
முதற்குறிப்பு
இப்பதிவில் இடம்பெறும், மேற்கோள்கள், எடுத்தாளப்படும் பகுதிகள் தவிர ஏனையவைகள் அனைத்தும் எனது தனிப்பட்டக் கருத்துக்களே. எந்தவொரு தனிப்பட்ட மனிதரின் (பொதுவாழ்வு தவிர்த்த) தனிமனித வாழ்வினை விமரிசிக்கவோ, எந்தவொரு தனிப்பட்ட மதக் காழ்ப்புணர்ச்சியை வெளிக்காட்டவோ, எவருடைய மனத்தையும் புண்படுத்தும் நோக்கமோ இன்றி, ஆபாசம், அருவருப்பான வார்த்தைப் பயன்பாடுகளின்றி இப்பதிவினை எடுத்துச் செல்லவே எனக்கு விருப்பம். தனிப்பட்ட பெயர்கள் வேண்டாம் பொதுமைகளிலேயே குறிப்பிடுவோம். என்னுடன் இயைந்து கருத்தாடும் நண்பர்களும் இதனை கருத்திற்கொள்ள வேண்டுகிறேன்.
இப்பதிவு ஆராய்ச்சிக் கட்டுரையுமல்ல நோக்கமும் அதுவல்ல. வெறும் கருத்துப் பரிமாறல் மட்டுமே. எனவே, ஆதாரங்கள் காட்டப்படலாம், ஆழ்ந்த விளக்கம் சிற்சில சமயங்களில் சாத்தியப்படாது. சொல்லாடுபவர்களும் அத்துணை தொலைவு செல்ல வேண்டியதில்லை. நம் தினப்படி வாழ்க்கையில் கூட பகுத்தறிவிற்கு ஒவ்வாத நிகழ்வுகள் பலவற்றைக் கடந்து வருவோம். அவ்வவற்றையும் இங்கு அலசி ஆராயலாம்.
சிறு சுயகுறிப்பு
இறைமறுத்தலில் இருந்து இறைத்தேடலில் இறங்கியிருக்கும் ஒரு பகுத்தறிவாளன் நான். பகுத்தறிவாளன் என்றவுடனே ஏதேனும் இயக்கத்தினைச் சார்ந்தவன் என எண்ணிவிட வேண்டாம். பகுத்தறிவாளன் என்பது பொதுப்பதம். அறிவியலும், ஆன்மிகமும் உண்மையை நோக்கிப் பயணிக்கும் இரு வேறு பாதைகள் என்பது எனது கருத்து. அவ்வகையிலேயே எனது எண்ணப்போக்குகளும். எல்லாம் தெரிந்தவர் என்று எவருமில்லை; ஏதுமறியாதவர் என்றும் எவருமில்லை. எனவே, என் கருத்துக்களில் தவறுகள் ஏதேனும் இருப்பின், தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கூடித் தெளிவோம்.
துவக்கம்
இங்கு நான் முன்வைக்கப்போகும் கருத்துக்களும், கேள்விகளும் பலருடைய அடிப்படை மற்றும் ஆழ்ந்த நம்பிக்கைகளைச் சற்று உரசித்தான் பார்க்கும். ஏதோ தனிப்பட்டு அவர்களையே குறித்துக் கூறுவதாகக் கூடத் தோன்றும். தனித்த சிந்தனை இல்லையெனில் அப்படித்தான் தோன்றும்.
ஓஷோ குறிப்பிடுவது போல், "மனிதன் நல்லவன்; ஆனால் மனிதர்கள் கெட்டவர்கள்". வள்ளலார் கூட "தனித்திரு, விழித்திரு, பசித்திரு" என்றார். தனித்த சிந்தனை நம்மை மேன்மைக்கு இட்டுச் செல்லும். நமது ஆளுமை நமை ஆளும். மற்றவருடன் நம்மை அடையாளப்படுத்திக்கொண்டால் மற்றவர் சிந்தனைகள் நம்மை ஆளும். ஒரு எடுத்துக்காட்டுத் தரவா ? எந்தவொரு மனிதனும் தனியனாக எந்தவொரு பாதகச் செயலையும் செய்ய விரும்பக்கூடமாட்டான், ஆனால் தன்னை ஏதேனும் ஒரு இயக்கத்திலோ, இனத்திலோ, மதத்திலோ அடையாளப்படுத்திக் கொண்டு அவன் செய்த அட்டூழியங்களை நாடறியும், நாமும் அறிவோம்.
பகுத்தறிவு என்றவுடன் கடவுள் எதிர்ப்பு (மறுப்பு) என்றும், பகுத்தறிவாளன் என்றால் கடவுளை மறுப்பவன் என்ற எண்ணம் மட்டுமே நம்மில் பலருக்கும் மேலோங்கியுள்ளது. அப்படியல்ல.
கலைஞர் கருணாநிதி கூறுவார், "ஆய்ந்தறிதல் வேண்டும், அதற்கேற்ற அஞ்சாமை வேண்டும், இன்றேல் சிந்தனையைச் சிறையிலிட்டுக் கொடுமையைக் கோலோச்சச் செய்வதற்கு உடந்தையாகிவிடுவோம்."1
இங்கு ஆய்ந்தறிதல் என்ற பதத்தினைக் கவனிக்கவும். "எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்ற குறட்பாவினை ஒரே வார்த்தையில் கூறுவதானால் ஆய்ந்தறிக எனலாம். அறிவும், பகுத்தறிவும் வேறு வேறல்ல, அறிவது நம் தேவை, பகுத்தறிவு (பகுத்து+அறி) என்பது அறியும் வகை.
அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எந்தவொரு நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படாமல் அறிவை, யுக்தியை தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து உண்மை என்ன என்று அறிய முயல்வதுதான்பகுத்தறிவாகும். (The belief that opinions and actions should be based on reason and knowledge rather than on religious belief of emotion.)
பகுத்தறிவின் மூலம் உண்மையை விருப்பு வெறுப்பின்றி தேடுவதும், அப்படித் தான் அறிந்த மட்டில் தான் உண்மை என்று தேர்ந்து கொண்டதை எந்த அச்சமும் இல்லாமல் வெளிப்படையாகக் கூறுபவனும், அப்படிக் கூறும்பொழுது வரும் எந்த எதிர்ப்பையும் உறுதியாக எதிர்த்து நிற்பவனும்தான் பகுத்தறிவுவாதி.
ஆயினும், பகுத்தறிவுவாதிகள் ஏன் இறைமறுப்பாளர்களாக, மதஎதிர்ப்பாளர்களாக மட்டுமே பார்க்கப்படுகின்றனர்? மனிதர்களை அடிமைப்படுத்துவதிலும், சுரண்டுவதிலும் பற்பல காரணிகள் (முதலாளித்துவம், நிறவேறுபாடு, பால்வேறுபாடு) இருந்தாலும் அவற்றின் தாக்கங்கள், பாதிப்புக்கள் உடனடியாகவே வெளிவந்துவிடும். அனைத்து மக்களாலும் குரல் கொடுக்கப்பட்டு, எதிர்க்கப்பட்டு தீர்வு காணப்படும்.
ஆனால், கடவுள் நம்பிக்கையும், மதநம்பிக்கையும் அப்படியல்ல. அது மெல்லக் கொல்லும் குயுக்தியான ஒன்று. மனிதரின் சுய சிந்தனையை மழுங்கடித்து, மதக்குருமார்களும், மதக்காவலர்கள் எனக் கூறிக்கொள்வோரின் வார்த்தைகளை ஏற்கும் அடிமைகளாக, ஏவலாளிகளாக மாற்றிவிடும். விளைவுகள் வெளிப்படையாகத் தெரியாது.
தெரிவித்தாலும் ஏற்றுக்கொள்ளும் சிந்தனைதான் இல்லாமற் போய்விட்டதே. இதுவரை நடந்த மதக் கலவரங்களில் எந்த மதத் தலைவராவது அல்லது அவரது குடும்பத்தாராவது களத்தில் இறங்கி சண்டையிட்டதுண்டா? பலியானது அப்பாவியும் ஏமாளியுமான சாதாரண மனிதர்கள்தானே? மதத்தலைவர் எவரேனும் கடவுளின் பெயரால் தீமிதிப்பதுண்டா? அலகு குத்திக் கொள்வதுண்டா? தன்னை வருத்திக் கொள்வது, பக்தி என்ற பெயரில் பக்தன் என்றுத் தன்னை அழைத்துக்கொள்ளும் சாதாரண மனிதன்தானே?
சாதாரண மனிதர்களால் உணர்ந்துகொள்ள இயலாத இந்தச் சூழ்நிலையில்தான் பகுத்தறிவுவாதியானவன் குரல் எழுப்புகின்றான். அவனது குரல் மட்டுமே தனித்து ஒலிப்பதால், அவன் காட்சியில் மையப்படுத்தப்படுகின்றான்.
"கடவுள் இல்லை என்று நான் கூறமாட்டேன், ஏனெனில் அதற்கான ஆதாரங்கள் என்னிடமில்லை;" என்று பகுத்தறிவு அறிஞர் ஒருவர் கூறியதாகப் படித்திருக்கிறேன் (அவரது கூற்றின் சிறுபகுதிதான் நினைவில் வந்தது). கடவுள் இருக்கிறார் என்று கூறினால் கூறுபவர் ஆதாரங்களைக் காட்டட்டும். முட்டையிலிருந்து கோழியா, கோழியிலிருந்து முட்டையா? விதை முதலா மரம் முதலா? என்ற வறட்டுக் கேள்விகள் வேண்டாம். விடை நமக்கும் தெரியாது, கேட்பவர்க்கும் தெரியாது. இதில் கடவுள் இருக்கிறார் என்று நிச்சயப்படுத்த எந்தவித ஆதாரமும் நமக்குக் கிடைக்கப்போவதில்லை. இல்லை என்று மறுப்பதற்கு ஆதாரம் ஏதும் தேவையில்லை. ஆனால் இருக்கின்றது என்பதற்கு நிச்சயமாக மழுப்பலற்ற ஆதாரம் காட்டித்தான் ஆகவேண்டும்.
சரி, அது என்ன பகுத்தறிவுவாதிகள் எல்லோரும் குறிப்பிட்ட ஒரு மதத்தினையே குறை கூறுகின்றனர்? அம்மதம் சகிப்புத் தன்மை கொண்டது, திருப்பித் தாக்காது என்ற எண்ணம்தானே என்றும் சிலரின் வாதமாக இருக்கின்றது.....
அடுத்த பதிவில் தொடர்கின்றேனே....?
அடிக்குறிப்புக்கள்
1. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 40வது பட்டமளிப்பு விழாவில் கலைஞர் கூறிய மாணவர்களுக்கான அறிவுரையில் சிறுபகுதி.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
01.03.2010
இரண்டாம் பதிவு
அப்படி ஒரு மாயத் தோற்றம் தோன்றக் காரணம் அப்பகுத்தறிவாளர்கள் இருக்கும் இடமும், அங்கு அக்குறிப்பிட்ட மதத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதும்தான், மற்றபடி எங்கெங்கெல்லாம் மூடப்பழக்கவழக்கங்களால் அர்த்தமற்ற பழமைகளினால் மனிதனின் சுயசிந்தனை மழுங்கடிக்கப்படுகின்றதோ ஆங்கெல்லாம் குரல் எழுப்பப்படும்.
மேலும், குறைகூறுபவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. மதம் என்றால் என்ன, கடவுள் என்றால் என்ன என்று அவர்களைச் சென்றடைந்த உண்மை அவ்வளவுதான். உண்மையில் ஏட்டில் உள்ளது வேறு.
ஒரு சின்ன உதாரணம் மற்றும் கேள்விகள். நமது நண்பரொருவர் இருக்கின்றார். அவருக்கும் நமக்கும் கடந்த 5 ஆண்டுகளாகப் பழக்கம். அந்நண்பரும், பழகுவதற்கு இனிமையானவராக, நேர்மையானவராக, மிக மிக நல்லவராக நமது பார்வையில் தெரிந்து நம் குடும்பத்தில் ஒருவராகவே பழகிவருகிறார். ஒரு நாள் அவர் நம்முடன் அமர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும்பொழுது காவலர்கள் வந்து அவரைக் கைது செய்கின்றனர். மேலும், அவர் கொலைசெய்து கொள்ளையடித்திருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். நாம் என்ன செய்வோம்...?
அவர் அப்படிப்பட்டவர் இல்லை, மிக மிக நல்லவர் என்றே வாதாடுவோம். ஆனால், அவர் தகுந்த சாட்சியங்கள் ஆதாரங்களுடன் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டால்....? அல்லது நாமே அவரைக்குறித்து விசாரித்து அறிந்துகொண்டால்...? இப்பொழுது அவரைப்பற்றிய நமது எண்ணம் எப்படி இருக்கும்?
பிறக்கும்போது நாம் ஏதும் அறியாதவர்களாகவே பிறக்கின்றோம். பிறக்கும்போது நமக்கு மதமும் தெரியாது, கடவுளும் தெரியாது. பிறப்பால் ஒருவனை இன்ன மதத்தவன் என்று முத்திரை குத்துவது அபாண்டம். அவன் வளரும் சூழ்நிலைதான், இந்தச் சமுதாயம்தான் அவனை அப்படி வார்த்தெடுக்கின்றது. அப்படி அறிமுகமான மதமும் கடவுளும் ஒரு சமயத்தில் நம்மை, நம் சிந்தனைகளைச் சுரண்டிக்கொண்டிருக்கின்றது என்று உணருவோமானால்...., இன்னமும் அதனைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்போமா அல்லது உதறிவிட்டு மனிதம் தேடுவோமா? கேள்விகள் அனைத்தும் நமது சிந்தனைக்கே.
ஆக, மதம் என்றும் மதநூல்கள் என்றும் நமக்குப் போதிக்கப்பட்டவைகள் அதன் ஒரு சிறு பகுதிதான். உண்மையில் அதில் குறைகள் அதிகம். சர்வ சக்தியுள்ள கடவுள் என்று ஒன்றிருந்து அது நம்மையும் படைத்து நமக்கு வழிகாட்டவும் வேதங்களை அருளியிருந்தால் அது எத்தன்மையானதாக இருக்கவேண்டும் என்று ஒரு சாதாரண படிப்பறிவில்லாத மனிதனால் கூட எடைபோட்டுவிடமுடியும். அப்படைப்பில் மக்கள் அனைவரும் சமம்தானே? எங்கிருந்து வந்தது மனிதருள் ஏற்றத்தாழ்வுகள்? இறைவனிடமிருந்தா ? இறைவன் அருளிய வேதங்களிலிருந்தா?
இருக்கலாம், வேதங்களில் சிலபல உண்மைகள் கோடி காட்டப்பட்டிருக்கலாம். மனிதகுலம் உய்ய வாழ்வியல் தத்துவங்கள் சொல்லப்பட்டிருக்கலாம். அவைகள் மனிதகுலத்தின் மேற்கொண்ட அக்கறையால் மேன்மையுள்ள சிலரால் படைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவைகளைத் திரித்து மதச்சாயம் பூசி, கடவுள் அருளியது என்று மக்களை அடிமைப்படுத்தும் கொடுமையை ஆதரிக்கலாமா? அணுவைத் துளைத்தேழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் என்றார் அவ்வையார் என்பதற்காக அவருக்கு அன்றே அணுவைத் துளைக்கும் அணுகுண்டுத் தொழில்நுட்பம் தெரிந்திருக்கிறது என்று பொருள் கொள்ள இயலுமா?
கடவுள் மனிதனைப் படைத்தானா?
இல்லை. கடவுள் தம் சாயலாக மனிதனைப் படைத்தான் என்றொரு வேதவரிகளைப் பிடித்துக்கொண்டு நாம் படைத்த கடவுள்கள்தான் எத்தனை எத்தனை! சர்வசக்தியுள்ள கடவுளின் கைகளில் ஆயுதம் எதற்கு ? பல தலைகள், பல கைகள் பல கண்கள் எதற்கு? என்றாவது நாம் சிந்தித்திருப்போமா? பலவீனமான மனிதனால், தன்னைவிட பலசாலியான, தனது காலத்தில் ஏற்படும் ஆபத்துக்களைச் சமாளிக்கும் விதமான ஆயுதங்கள் தரித்த தன்னைவிட மேம்பட்ட ஒரு கற்பனையான ஒன்றைப் படைக்க முயற்சித்து, விரைவில் அதனையே நம்பவும் துவங்கிவிட்டான். காலப்போக்கில் மனித சமுதாயத்தில் இருக்கும் குடும்பச் சூழலையும் கடவுளர்களுக்குள் புகுத்திக்கொண்டான். கடவுள் ஒருவரே என்று மதங்கள் கூறுவது உண்மையெனில் எப்படி இத்தனை கடவுள்கள் உருவாக்கத்தை அவர் விட்டுவைத்தார்? அவர் எங்கே விட்டுவைத்தார், எல்லாம் இந்த மதக்குருமார்களின் யுக்திதான். மக்கள் பிளவுபட்டிருக்கும்வரை அவர்கள் பாடு கொண்டாட்டம்தானே. இதை அறியாத வரை நாம் மக்களல்ல வெறும் மாக்களே.
Facebook தளத்தில் Tamil Eelatamilan என்றொருவர் பதிந்திருந்த கேள்வியினைப் பாருங்கள். "ஏலம் தரும் உங்கள் இறைவன் கழுத்தில் தங்கச்சங்கிலி , பொன் ஆடை , காலுக்கு கீழ் உலக வங்கி அளவில் உண்டியல்... கையில் இருந்த 1 ரூபாயை அதில் போட்டு வந்தவன் குடிசையில் எல்லோரும் 2 நாளாய் பட்டினி... இறைவ எங்கே உன் தாராள மனசு?" நம் வாழ்வின் எதார்த்தம் தொனிக்கின்றதா?
ஆக, கடவுட்கோட்பாடு மனிதனின் மனம் சார்ந்தது, அதனை மதம் சார்ந்ததாக மாற்றியதன் மூலம் ஆதாயமடைபவர்கள் பலர், பாதிக்கப்படுவோர் மக்கள்.
மனிதனுக்கு மதம் எதற்கு?
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று வெளியில் கூறிக்கொண்டாலும், மதத்தின் பெயரால் அரங்கேறும் அட்டூழியங்களை அதனால் தட்டிக் கேட்க முடியவில்லை. உலகின் ஒரே இந்து நாடு நேபாளம் என்ற பெருமை அந்நாட்டிற்கு. அப்பெருமையால் அந்நாடு சாதித்தது என்னவோ? அரபு நாடுகள் இசுலாமிய மதமும், அமெரிக்க ஏகாதிபத்தியம் கிறித்துவத்தைச் சார்ந்தும் இருக்கின்றன, இதில் அமெரிக்கா தனது பணத்தாளிலேயே We Trust in God என்று ஒரு வாசகம் கொடுத்துள்ளது. இது மனித உரிமை மீறல் இல்லையா? அந்நாட்டு மக்கள் அனைவரும் கடவுளை நம்புகிறார்களா? அம்மக்கள் விருப்பத்தோடுதான் அவ்வாசகம் தெரிவிக்கப்படுகிறதா? ஒரு மதத்தைச் சார்ந்து இருப்பதால் ஒரு நாட்டிற்கு என்ன பலன் கிடைத்துள்ளது, அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தவர் மட்டுமே இருக்கும் நாட்டில் ஒருவருக்கொருவர் சண்டைசச்சரவுகள் இன்றி அன்போடு ஒத்து வாழ்கின்றனரா?
இதில், அவர்கள் எங்கள் மதத்தவரை மதம் மாற்றிவிட்டனர், இவர்கள் எங்கள் மதத்தவரை மதம் மாற்றிவிட்டனர் என்று சச்சரவு வேறு. புரிந்து கொள்ளுங்கள் எண்ணிக்கைகளில் மதமில்லை. எண்ணிக்கைகள் காட்ட மதம் ஒன்றும் அரசியல் கட்சியுமல்ல. மதக்காவலர் என்றும் யாரும் தேவையில்லை. ஒரு மதம் என்று ஒன்று இருந்து அது சரியென்று தோன்றினால் மக்கள் அவரவரே இணைந்துகொள்வர்.
மடமைகளைப் போதிக்கும் மதம் தேவையா?
அடுத்த பதிவில் தொடர்கின்றேனே....?
------------------------------------------------------------------------------------------------------------------------------------
09.11.2010
மூன்றாம் பதிவு
கடவுளின் தேவைதான் என்ன?
மனிதன் தோன்றிய நாற்தொட்டு அவனைச் சுற்றிலும் ஆபத்துக்கள் சூழ்ந்துதான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அவனுக்கு முன்னரே பல்வேறு மிருகங்கள் தோன்றியிருந்தன. எல்லாவற்றையும் கண்டு பயந்தான். அறியாமைதானே பயம். அன்று நெருப்பைக் கண்டு பயந்த மனிதன் இன்றுமா நெருப்பைக் கண்டு பயப்படுகின்றான்? அதனைக் கையாளும் அறிவு பெற்றுவிட்டதால் எச்சரிக்கையாகவும் அனாயசமாகவும் அதனைப் பயன்படுத்துவதைக் காண்கின்றோமே. இன்று நெருப்பிற்குரித்ததான கடவுள் உருவகம் தேவையற்றுப் போய் நெருப்பு நம் கட்டுப்பாட்டில் இருக்கும்பொழுது நாமே நெருப்பின் கடவுளாகத் தெரிகின்றோம்.
அன்று எதனைப்பற்றிய அறிவும் இல்லாததால் அவைகளுக்குப் பயந்து, சற்று அடிமைத்தனம் காட்டவேண்டி அவ்வவற்றை வணங்கத் துவங்கியிருக்கவேண்டும். தன் உயிர்வாழ்தலுக்கான தந்திரம் இது. வலியோன் முன் எளியோன் சற்று பணிவுடன் நடந்து கொள்வதைப்போன்றதே இது. ஒரு பொய்மை நம் கண்முன்னே திரும்பத் திரும்ப நிகழ்த்தப்பெறும்போது, நாளடைவில் நம் மனது அதனை உண்மையெனவே கருதிக்கொள்ளும். அப்படி வணங்கத் துவங்கிய சிலரைக் கண்டு பின் வந்த அனைவரும் அதனையேத் தொடர்ந்தனர்.
இங்கு ஒரு சிறிய கதை. ஆசிரமம் ஒன்று. தலைமைக்குருவும் சில சீடர்களும் அங்குண்டு. குருவானவர் ஆசிரமத்தில் ஒரு பூனை வளர்த்துவந்தார். யாகம் வளர்க்கும்பொழுதெல்லாம் அப்பூனை குறுக்கும் நெடுக்குமாக ஓடி யாகத்திற்கு இடைஞ்சல் கொடுத்துக்கொண்டிருந்தது. குரு சீடர்களிடம் அதனைப் பிடித்து தூணில் கட்டுமாறு உத்தரவிட்டார். இது ஒவ்வொரு முறையும் தொடர்ந்தது. யாகம் வளர்க்கும்போதெல்லாம் பூனையின் தொந்தரவு கருதி அதனைத் தூணில் கட்டிப்போடுவதும் பின் கட்டவிழ்த்துவிடுவதும். ஒரு சமயம் குரு இறந்து விட்டார். பூனையும் இறந்துவிட்டது. அடுத்துள்ள தலைமைச் சீடன் குருவானான். அவன் தலைமையில் முதல் யாகம் நிகழ்த்தப் போகின்றார்கள். எல்லாம் தயாராகிவிட்டது என்று யாகத்தினைத் துவக்கப்போகும் வேலையில் குருவான தலைமைச்சீடன் சத்தமிட்டான், "மூடர்களே, நிறுத்துங்கள், பூனை எங்கே? யாகம் நிகழ்த்தும்பொழுது ஒரு பூனையைத் தூணில் கட்டவேண்டும் என்று தெரியாதா? அப்படிச் செய்யாவிட்டால் எப்படி யாகம் முழுமைபெறும்? போய் உடனே எங்கிருந்தாலும் ஒரு பூனையைப் பிடித்து வந்து தூணில் கட்டுங்கள்."
கதையென்றாலும், கதையின் எதார்த்தமும் பொருளும் புரிகின்றதுதானே? அப்படியொரு செம்மறியாடுகள் நிலைமையில் ஒரே சிந்தனையில் மக்கள் இருக்கும்பொழுது அவர்களில் இருவர் மட்டும் தனித்ததொரு சிந்தனை கொண்டு தோன்றியிருக்க வேண்டும். அது எப்படி என்கிறீர்களா? தவறுகளால் பிறந்தவன் மனிதன் என்று சொல்வோமே அதற்கு நாம் கொண்ட பொருள் (அட, நம்பிக்கைகள் - கொண்டதும் நின்றதும் பகுதியில் பதிந்திருக்கலாமோ?) ஆதாமும், ஏவாளும் புரிந்த தவறுகளால் பிறந்தவன் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றோம். உயிரினங்களில் செல் பிரிதல் (Cell Mutation) என்றொரு தொடர் நிகழ்வு ஒன்று நடந்து கொண்டிருக்கும். ஒரு உயிரினத்தின் செல் இரண்டாகப் பிரிந்து இரண்டு அதே உயிரினத்தின் செல்களாகவே மாறும். வெகு சில சமயங்களில் இந்தச் செல்பிரிகையில் தவறுகள் ஏற்பட்டு குறைபாட்டுடனோ அல்லது அதிகப்படியான மாற்றத்தோடோ புதுவகை உயிரினம் போன்று மாறுபட்டுத் தோன்றவும் வாய்ப்புக்களுள்ளது. பல மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை இப்படி ஏற்படும் தவறுகளாலேயே பல்வேறு உயிரினங்களின் தோற்றம் நிகழ்ந்துள்ளதாக அறிவியல் அறிஞர்கள் கூறுவர். அதுபோன்றதொரு தவறுகளாலேயே மனிதனும் தோன்றியதாக அறிவியிற்கூற்று.
இப்பொழுது அந்த இருவரைக் கவனிப்போம். செம்மறியாடுகளைப்போன்ற நிலையில் இருக்கும்பொழுது, ஏன் இப்படி முட்டாளாக இருக்கின்றோம்? என்று எண்ணிய முதலாமவன், தனித்துச் சிந்திக்கத் துவங்குகின்றான். தன் சிந்தனையில் உதித்தவைகளை ஏனைய மக்கள் முன் எடுத்து வைக்கின்றான். பழமையில் ஊறிய அவர்கள் புதுமையை எளிதில் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். புதிய சிந்தனை உடையவனைத் தம்மிலிருந்து தனிப்படுத்திப் பார்க்கத் துவங்குகின்றனர்.
அப்பொழுது, இதனைக் கவனித்த மற்றொருவனுக்கும் இதன் உண்மை புரிந்தது என்றாலும், மக்களின் மூடத்தனைத்தை தனது மூலதனமாக்கி, அதற்குத் தானே காவலனாகவும் மாறி தன் வாழ்க்கையையும் தன் சந்ததியினரின் வாழ்க்கையையும் வளம்பட மாற்றிக்கொள்ள முற்பட்டான். அதில் வெற்றியும் கண்டான். முதலாமவனுக்கு எதிராக அனைவரையும் திருப்பினான். தனிப்பட்டதொரு சிந்தனையே தவறானது எனவொரு கொள்கையும் வகுக்கப்பட்டது. இவன் சொல்வதே வேதம் எனப்பட்டது. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது உண்மையானது.
இப்படியான அந்த இரண்டாமவன் ஒவ்வொரு கூட்டத்தாரிலும் உருவாகியிருக்க வேண்டும், அல்லது படையெடுப்பில் அடுத்தகூட்டத்தாருக்கு இம்முறை புகுத்தப்பட்டிருக்க வேண்டும். எப்படியோ, மக்கள் பலரின் அறியாமையை சிலர் பயன்படுத்திக்கொள்ளும் தந்திரங்கள் உருவாகிவிட்டன. அவற்றை நிலைப்படுத்திக்கொள்ள ஆளுமைக் குணம் கொண்டோரின் உதவியையும் நாடியது தனி.
பிறிதொரு சமயம் தொடர்வோமே...

Subscribe to:
Posts (Atom)