Thursday, August 13, 2015

கொங்குத் தென்றல்: தமிழக விடுதலை வீரர்கள் இந்திய சுதந்திரத்திற்காக போ...

கொங்குத் தென்றல்: தமிழக விடுதலை வீரர்கள் இந்திய சுதந்திரத்திற்காக போ...: மரியாதைக்குரியவர்களே,              வணக்கம். இந்திய விடுதலைக்காக போராடிய தமிழக வீரர்கள்  பற்றி அறிந்து கொள்வோம் இதோ தங்களது பார்வைக்காக த...

Tuesday, June 16, 2015

Tuesday, April 7, 2015

கசியும் மௌனம்: சிங்கப்பூர் பயணம் - 7

கசியும் மௌனம்: சிங்கப்பூர் பயணம் - 7: சிங்கப்பூரில் யாரை எப்போது சந்தித்தாலும் சுற்றிப்பார்த்த இடங்கள் குறித்த அவர்களின் பட்டியலில், விசாரிப்புகளில் தவறாமல் இடம்பெறுவது நூ...

Monday, March 16, 2015

ஐன்ஸ்டைன்.





ஐன்ஸ்டைன்....
இவரைப் பத்தி எனக்கு ரொம்பலாம் தெரியாது. ஆனா, இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தனியொரு மனிதனா அறிவியல் உலகையே தன்னோட சார்பியல் கோட்பாட்டினால் அசைத்துப் பார்த்தவர். மார்ச் 14 இவரோட பிறந்தநாள். எனக்கு என்னோட பிறந்தநாளே ஞாபகத்துல இருக்காது. அடுத்தவங்க பிறந்தநாளுன்னா சுத்தம்.
மதிப்பிற்குரிய ஐயா, Narayanan Seshadry இவரைப்பத்தி ஒரு பதிவு போடுங்கன்னு சொல்லிருக்காரு. ஐன்ஸ்டைனோட சொந்த வாழ்க்கையைப் பத்தி எனக்குத் தெரியாது. தெரிஞ்சுக்குறதுலயும் அவ்ளோ ஆர்வம் இல்லை. ஆனா, அவரோட கண்டுபிடிப்புகள் ஆய்வுகள் குறித்து எனக்கு ஆர்வம் அதிகம். அவரோட வார்த்தைகளா அவரைப்பத்தி சொன்னது ஒன்னு இருக்கு அது எனக்கு ரொம்பப் பிடிச்ச வாசகம்.
I have no special talent. I am only passionately curious.
இது தன்னடக்கம். ஆனா, மிக எதார்த்தமான உண்மை. மனிதர்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில சிறப்பாத்தான் பிறக்குறாங்க. எல்லாமே சிறப்பா இருக்கும்போது தனிச்சிறப்புன்னு எதைச் சொல்ல முடியும்? ஆனா, யார் தன்னோட சிறப்பை உணர்ந்து அதைச் சரியா வெளிப்படுத்துறாங்களோ அவங்களே சிறப்பானவங்கன்னு மத்தவங்க சொல்றாங்க, ஏத்துக்கவும் செய்யுறாங்க.
இவர் தன்னை உணர்வுந்துதலுடன் கூடிய ஒரு ஆர்வமுடையவன் என்கிறார். எதையும் துறுதுறுவென்று அறிந்து கொள்ளும் ஆர்வமுடையவர் என்கிறார். இதே குணத்தைதான் நான் என்னிடமும் உணர்ந்திருக்கிறேன். அதனால்தான் இந்த மேற்கோள் எனக்குப் பிடித்திருக்கின்றது. அவரையும் எனக்கு இன்னும் சற்று நெருக்கமாக உணர முடிந்திருக்கின்றது.
சரி, விஷயத்திற்கு வருவோம்.
ஐன்ஸ்டைனின் காலத்துல, கடந்த மூன்று நூற்றாண்டுகளா உலகம் நம்பிக்கிட்டு இருந்த, ஒரு இயற்பியல் விதியை ரொம்ப அசால்ட்டா அடாசுன்னு சொல்லாமச் சொன்னாரு. அது என்னன்னா ஈர்ப்பு விசையைக் குறித்த பார்வை. நமக்கெல்லாம் தெரியும். நியூட்டன்தான் ஈர்ப்பு விசையைக் கண்டு பிடிச்சாருன்னு. அவரு என்ன சொன்னாருன்னா, நிறையுள்ள எல்லாப் பொருளுக்கும் ஈர்ப்பு விசை இருக்கும். அது கண்ணுக்குத் தெரியாது. அந்தப் பொருளைச் சுத்தி நிறையைப் பொறுத்து ரொம்ப தூரத்துக்குப் பரவி இருக்கும்.
அதுனாலதான் சூரியன் பூமியை, மற்ற கிரகங்களை இழுத்துப் பிடிச்சு வச்சுருக்குன்னாரு. அதுக்கு சமன்பாடுகள்லாம் கூட தந்தாரு. எல்லாமே சரியாத்தான் இருந்துச்சு. ஆனா, ஐன்ஸ்டைன் வர்ற வரைக்கும்தான்.
அவர் கொடுத்த சமன்பாடெல்லாம் ஈர்ப்பு விசையோட நிகழ்வுக்குப் பின்னால வர்ற மதிப்புகளைத் தந்துச்சு. ஆனா, ஈர்ப்பு விசை எப்படிச் செயல்படுதுன்னு நியூட்டன் சரியா விளக்கவில்லை.
நியூட்டன் சொன்ன ஈர்ப்பு விசை சரிதான். ஆனா, அந்த விசை நேரடியா இன்னொரு பொருளைப் பிடிச்சு இழுத்து வச்சுருக்கலைன்னாரு. அப்புறம் என்ன ஆள்விட்டா பிடிச்சு வச்சுருக்குன்னா.... இருங்க அவசரப்படாதீங்க. நமக்கே தெரியும், தொலை தூரத்துல இருக்குற நிலாவ‍ை விலகிப் போயிறாம நம்ம பூமி இழுத்துப் பிடிச்சு வச்சுருக்கு. நிலாவும் நம் பூமியில நழுவி விழுந்துக்கிட்டுதான் இருக்கு. ஆனா, அது நழுவி விழுகுற வேகமும், முன்னோக்கி நகர்ற வேகமும் சமன் படுறதால அது பூமி மேல விழுகாம பூமியைச் சுத்தி வருது.
ஆனா, சர்ர்ர்ருனு... பூமியில இருந்து செங்குத்தா நம்மளால ஒரு ராக்கெட்டை எடுத்துக்கிட்டு, பூமியோட ஈர்ப்பு விசையில இருந்து தப்பிச்சு விண்வெளிக்குப் போயிற முடியுது. அதுக்கு ஈர்ப்பு விசையை விட கொஞ்சம் அதிகமான விசை கொடுத்தா போதும். எஸ்கேப் வெலாசிட்டி(Escape Velocity)ன்னு சொல்வாங்க.
நிறையுள்ள நிலாவையே இழுத்து வச்சுக்கிட்டு பலமான விசையா தெரிஞ்ச பூமியோட ஈர்ப்பு விசை, தன்கிட்ட இருந்து ஒரு ராக்கெட் தப்பிச்சுப் போறதை இழுத்துப் பிடிச்சு வச்சுக்க முடியாத அளவுக்கு பலவீனமான விசையாவும் இருக்கு. ஆக, ஈர்ப்பு விசையோட எல்லை பெருசு, சக்தி குறைவு.
ஐன்ஸ்டைன் என்ன சொல்றாருன்னா... பூமியோ மற்ற கிரகங்களோ சூரியனையோ நட்சத்திரத்தையோ சுத்தி வர்றது நேரடி ஈர்ப்பு விசையாலன்னு சொல்ல முடியாது. அவற்றோட ஈர்ப்பு விசை வெளியை வளைச்சு வச்சுருக்கு, அந்த வளைவுகள்ல சிக்கிக்கிட்ட பூமி மாதிரியான கோள்கள் வேற வழியில்லாம அதுல சுத்திக்கிட்டு இருக்குதுங்கன்னாரு.
எல்லோரும் சிரிச்சாங்க. வெளியையாவது வளைக்கிறதாவது... தலைவருக்கு நிச்சயம் புத்தி பேதலிச்சுப்போச்சுன்னுதான் நெனச்சுருப்பாங்க. வெளின்னா என்ன, அது எப்படி இருக்கும், அதைக் கையால பிடிக்க முடியுமா, இல்லை எதுலயாச்சும் பிடிச்சு வச்சுதான் பாக்க முடியுமா? அதைப் போயி எப்படி வளைக்க முடியும்?
அதைப்பத்தி யோசிக்கிறதுக்கு முன்னாடி, ஐன்ஸ்டைன் சொன்னதுக்கு ஒரு உதாரணம் காட்டி புரிஞ்சுக்க முயற்சி செய்வோம். நம்ம கிராமத்துல மாட்டுவண்டி பாத்துருப்போம். கிராமத்து மண்சாலைகளையும் பாத்துருப்போம். ஒரு நாளு நல்லா மழை பேஞ்சு அந்தப் பாதை ஈரமா இருக்குன்னு வச்சுக்குவோம். அதுல ரெண்டு மூணு மாட்டு வண்டிங்க போயிருக்குன்னும் வச்சுக்குவோம்.
அந்த மாட்டு வண்டிகளோட சக்கரத்தோட தடம் அந்தச் சாலையில பதிஞ்சு போயிருக்குமா... அதுக்கப்பறம் மழை நின்னு வெயில் சுள்ளுனு ஒரு ரெண்டு நாளு அடிச்சு அந்தப் பாதை நல்லாக் காய்ஞ்சு போயிருச்சுன்னு வைங்க. அந்த வண்டிச்சக்கரத் தடங்களும் நல்லா காய்ஞ்சு இறுகி கெட்டியா இருக்கும்.
இப்ப, நாம ஒரு சைக்கிள்ல அந்தப் பாதையில வர்றோம். நேரா வந்துக்கிட்டு இருக்குற சைக்கிள் டயர் அந்த வண்டிச் சக்கரத்தோட தடம் எதுக்குள்ளயாச்சும் சிக்குச்சுன்னா, அந்த தடத்தோட வழியிலதான் இழுத்துக்கிட்டு போகும். அந்தத் தடம் முடிஞ்சு குறுக்கால வேற ஒரு தடம் இணைஞ்சு இருந்துச்சுன்னா... டயர் அந்தத் தடத்துக்குள்ள இழுத்துக்கிட்டு போகும்.
அது மாதிரிதான் சூரியனோ, பூமியோ, எந்தவொரு நிறையுள்ள பொருளும், அதனதன் நிறைக்கேற்ப தன்னைச் சுத்தியுள்ள வெளியை வளைச்சு வச்சுருது. அந்த வளைவுக்குள்ள வந்து மாட்டிக்கிற மத்த கோள்களோ பொருட்களோ வேற வழியில்லாம அந்த வளைவுலேயே சுத்தி வருதுன்னு சொன்னாரு.
அதாவது நியூட்டன் என்ன சொல்றாருன்னா... ஒரு கல்லைக் கயிற்றில் கட்டிச் சுத்துறது மாதிரி, ஈர்ப்புவிசை இருக்குன்னாரு. கல்லை ஈர்ப்பு விசைங்குற கயிறு இழுத்துப் பிடிச்சுக்கிட்டு இருக்குங்குறாரு.
ஐன்ஸ்டைன் என்ன சொல்றாருன்னா... ஒரு குண்டு சட்டிக்குள்ள கோலிக்குண்டைப் போட்டுச் சுத்துறா மாதிரிங்குறாரு. அதாவது குண்டுச்சட்டி வளைஞ்சு இருக்கு... அதுனாலதானகோலிக்குண்டும் வளைவா சுத்துதுங்குறாரு.
அவங்க ரெண்டு பேரும் அப்டீயே இருக்கட்டும். வெளி வளைஞ்சுருக்கா இல்லையா? அந்தப் பிரச்சனைக்கு வருவோம். இதைத்தான் நான் சொல்ல வந்ததும். நம்மளைப் பொறுத்த வரை வெளிங்குறது ஒரு பொருளே இல்லை. சூன்யம்னு சொல்வோம். அப்டீன்னா ஒன்னுமே இல்லை. ஒன்னுமே இல்லாதது எப்டீங்க வளையும்னு கேட்டா... வளையுதே... அதை நிரூபிக்கவும் செஞ்சுருக்காங்களே.
நமக்கெல்லாம் தெரியும் ஒளி எப்பவும் நேர்கோட்டுலதான் பயணிக்கும். கண்ணாடி மாதிரி ஒரு பொருள்ல பட்ட பிரதிபலிக்கவோ விலகவோ செய்யும். காத்துல பயணிச்சுக்கிட்டு இருக்குற ஒளி, திடீர்னு தண்ணிக்குள்ள நுழையும்போது விலகல் அடையும்.
அதே மாதிரி (விண்)வெளியில பயணம் செஞ்சுக்கிட்டு இருக்குற ஒளி நேர்கோட்டுலதானே வரனும். எங்கயாச்சும் வெளி வளைஞ்சு இருந்துச்சுன்னா... அங்கே ஒளியும் வளையத்தானே வேணும். ஏன்னா, அதுக்கு போறதுக்கு வேற வழி இல்லை. வளைஞ்ச வெளியிலதான் போயாகனும். இதைத்தான் ஐன்ஸ்டைன் சொல்றாரு.
சொன்னா போதுமா, நிரூபிக்க வேணாமா. நிரூபிச்சாங்க.
சூரியன் தன்னைச் சுத்தி இருக்குற வெளியை வளைச்சுருக்குல்ல?
ஆமா.
அப்டீன்னா, சூரியனுக்குப் பின்னாடி இருக்குற ஒரு நட்சத்திரத்தோட ஒளி பூமிக்கு நேரா வராம கொஞ்சம்
வளைஞ்சுதானே வரனும்...
ஆமா. வளைஞ்சுதான் வருது.
எப்டீ?
அது 1919ம் ஆண்டு, மே மாதம் 29ம் தேதி சூரியகிரகணம். அன்றைக்கு ஆர்தர் எடிங்டன் என்பவர் ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரை ஓரமாக இருக்கும் பிரின்ஸிபி (Principe) என்ற தீவில் இருந்து நம் சூரியகுடும்பத்திற்கு அண்மையில் உள்ள Hyades விண்மீன் திரளில் உள்ள நட்சத்திரத்தின் ஒளியைப் பதிவு செய்கிறார்.
சூரியகிரகணத்தின் போதுதான், வளிமண்டலத்தில் சூரிய ஒளியின் தொந்தரவு இல்லாமல், நட்சத்திரங்களின் ஒளியைக் காண முடியும். அப்படி நோக்குகையில் , ஹயேடிஸ் திரளில் உள்ள ஒரு நட்சத்திரம் நம் சூரியனுக்குப் பின்னே இருந்திருக்க வேண்டும். அந்நேரத்தில் அதனை எடிங்டன் அவர் இருந்த இடத்தில் இருந்து பார்த்திருக்க முடியாது. அதாவது அதிலிருந்து வரும் ஒளியை அவர் பார்த்திருக்க முடியாது.
ஆனால், சூரியன் தன்னைச் சுற்றி உள்ள வெளியை வளைத்து வைத்திருப்பதால், அந்த ஒளி வளைந்த வெளியில் பயணம் செய்து நம் எடிங்டனின் பார்வையில் பட்டிருக்கின்றது. இது மிக நுண்ணிய அளவுதான். அதாவது 1.75 ஆர்க்செகண்ட்தான்.
இவர் மட்டுமல்ல, அதே சமயத்தில் வடக்கு பிரேசிலில் உள்ள Sobral என்னும் ஊரில் இன்னொரு குழுவும் அந்த நட்சத்திரத்தின் இருப்பையும் ஒளியையும் பதிவு செய்தது. ஒப்பு நோக்குகையில் எடிங்டன் கண்டறிந்த வளைவு 1.61 ஆர்க் செகண்ட் வந்தது. (இதில் ±0.30 வேறுபாடு வரலாம்)
ஆக, எதிர்பார்த்தபடி ஒளி வளைந்து வருவதால், வெளி வளைகிறது என்பது நிரூபணம் செய்யப்பட்டது. அதன் பின்னர் ரேடியோ தொலைநோக்கிகள் மூலமாக, கணிணிக் கணக்கீடுகள் மூலமாகத் துல்லியமாக வெளி வளைகின்றது, எவ்வளவு வளைகின்றது போன்றவற்றையெல்லாம் கணித்து விட்டார்கள்.
அந்த வளைவை ஈர்ப்பு வில்லை (Gravitational Lens) என்பார்கள்.
நம்ம கவிஞர்கள், வானத்தை வளைக்கவான்னு கவித்துவமா காதல் கவிதைகள் எழுதிக்கிட்டு இருக்க, இவரு தனியாளா கணக்கீடுகளை வச்சு... நீங்க யாரும் வளைக்க வேணாம், அதுவே வளைஞ்சு வளைஞ்சுதான் இருக்குன்னு சொல்லிட்டாரு.
இப்ப சொல்லுங்க... இவரு மாமேதைதானே...? அதான் எனக்கு இவரைப் பிடிச்சுருக்கு.


ஆக்கமும், படைப்பும் : முகனூல் நண்பர் பாபு Pk

Sunday, February 8, 2015

KRISHNAMOORTHY THOTTAM: குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்!

KRISHNAMOORTHY THOTTAM: குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்!: குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்! செ யற்கையாக குடிநீரை சுத்திகரிக்கும் பியூரிபையர்கள் ஆயிரம் வந்தாலும், இயற்கையிலேயே கிடை...