Wednesday, June 14, 2017
Saturday, June 3, 2017
புதன்மலர் கட்டுரைகள்: 58. குவா கெலாம் - பெர்லிஸ் குகை
புதன்மலர் கட்டுரைகள்: 58. குவா கெலாம் - பெர்லிஸ் குகை: ஈய வளமுள்ள தென்கிழக்காசிய நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதை பள்ளியில் படிக்கும் போதே நாம் வரலார்றுப் பாட வகுப்பில் படித்திருப்போம். 1...
Tuesday, May 9, 2017
கசியும் மௌனம்: தலைப்புகளும் செய்திகளும்
கசியும் மௌனம்: தலைப்புகளும் செய்திகளும்: சமீபத்தில் ஒரு செய்தித்தாளின் ஏழாம் பக்கத்தில் மூன்று கால அளவிலான ஒரு செய்தியின் தலைப்புச் செய்தியாக ” பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்த...
Thursday, May 4, 2017
வலிப்போக்கன் : பொருக்கியை கடவுளாக கொண்ட மதம்
வலிப்போக்கன் : பொருக்கியை கடவுளாக கொண்ட மதம்: #இந்துமதம்: விசித்திரமானது இந்து மதம். வேடிக்கையாக இருக்கிறது இந்துக்களின் இறைநம்பிக்கை. ‘ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுக்கமாக ...
Saturday, March 4, 2017
மரப்பசு: ஐந்து வயதிலிருந்து Graph கற்போம்.
மரப்பசு: ஐந்து வயதிலிருந்து Graph கற்போம்.: வரைபடத்தாளை ( Graph Sheet) எந்த வயதில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்? பள்ளிப் பாடங்களில் ஏழாம் வகுப்பிலிருந்துதான் Graph சொல்லிக் கொடுக்...
Tuesday, February 21, 2017
அதிஷா: ஆதி யோகியின் ஆக்கிரமிப்புகள்
அதிஷா: ஆதி யோகியின் ஆக்கிரமிப்புகள்: ஆன்மிக வணிகர்... தன்னை யோகி என சொல்லிக்கொள்கிறவர். நம் கண் முன்னே காட்டை அழிக்கிறார். அங்கே கட்டிடங்கட்டி காட்டுயிர்களுக்கு தொல்லைகொடுக்...
Thursday, January 26, 2017
கசியும் மௌனம்: எச்சூஸ்மீ மிஸ்டர் முதுமை!
கசியும் மௌனம்: எச்சூஸ்மீ மிஸ்டர் முதுமை!: மனிதர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை வாழ்க்கையை நடத்துவது குறித்து இருக்கும் பயம் , ஒரு கட்டத்தில் மெல்ல தம் மீது படரும் முதுமை மீதானதாகத் த...
Tuesday, January 3, 2017
எட்டயபுரம்: சினிமா மந்திரம்காய்ச்சல் அல்லது காலராஊசி போட்ட வ...
எட்டயபுரம்:
சினிமா மந்திரம்காய்ச்சல் அல்லது காலராஊசி போட்ட வ...: சினிமா மந்திரம் காய்ச்சல் அல்லது காலரா ஊசி போட்ட விளைவு என்று நினைக்கிறேன் , ஆறு அல்லது ஏழு வயது இருக்கும் . பள்ளிக்கூடம் போகாமல் வீ...
சினிமா மந்திரம்காய்ச்சல் அல்லது காலராஊசி போட்ட வ...: சினிமா மந்திரம் காய்ச்சல் அல்லது காலரா ஊசி போட்ட விளைவு என்று நினைக்கிறேன் , ஆறு அல்லது ஏழு வயது இருக்கும் . பள்ளிக்கூடம் போகாமல் வீ...
Sunday, November 6, 2016
தந்துகி: ஆண்பால் பெண்பால் அன்பால் - ஆதவன் தீட்சண்யா
தந்துகி: ஆண்பால் பெண்பால் அன்பால் - ஆதவன் தீட்சண்யா: இ ருபாலினரையும் குறிப்பிடும்போது எல்லாம் `ஆண், பெண்' என்றுதான் நமக்குச் சொல்ல வருகிறதே தவிர, `பெண், ஆண்' எனச் சொல்ல வராது. ஆணுக்கு...
Tuesday, May 31, 2016
என் எழுத்து: ஏலியனைத் தேடி ஒரு அதிசயப் பயணம் (Breakthrough Star...
என் எழுத்து: ஏலியனைத் தேடி ஒரு அதிசயப் பயணம் (Breakthrough Star...: ஏலியன்களைப் பற்றி நான் அதிகமாக எழுதுகிறேன் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இல்லாத ஒன்றைப்பற்றியதான மூடநம்பிக்கையைப் பலரின் மனதில் வளர்த்த...
Monday, May 30, 2016
Wednesday, May 4, 2016
Paleo Diet for Dummies : 30 Days Paleo Challenge / 30 நாட்கள் பேலியோ சாலஞ்ச...
Paleo Diet for Dummies : 30 Days Paleo Challenge / 30 நாட்கள் பேலியோ சாலஞ்ச...: முப்பது நாள் பேலியோ சாலஞ்ச். பேலியோ துவங்குவதின் முதல் பிரச்சனையே என்ன சாப்பிடுவது? எப்பொழுது சாப்பிடுவது? எவ்வளவு செலவாகும்? என்பதுதான்....
Tuesday, April 19, 2016
Avargal Unmaigal: ஜெயலலிதா தலித்தாக இருந்திருந்தால்
Avargal Unmaigal: ஜெயலலிதா தலித்தாக இருந்திருந்தால்: ஜெயலலிதா தலித்தாக இருந்திருந்தால்... பாஜகவின் உண்மையான பெண் தொண்டர் கேட்கும் நியாமான கேள்வி பாஜகவின் உண்மையான பெண் தொண்டர் தனது பேஸ்ப...
Thursday, April 7, 2016
வலிப்போக்கன் : தேசபக்தி தனியார் மயம்
வலிப்போக்கன் : தேசபக்தி தனியார் மயம்: படம்- www.4tamilmedia.com இந்துத்துவா கும்பலுக்கும் இந்தீய இராணுவ்திற்கும் மட்டுமே மொத்தமாய் இருந்து வந்த இந்தீய தேசபக...
Thursday, August 13, 2015
கொங்குத் தென்றல்: தமிழக விடுதலை வீரர்கள் இந்திய சுதந்திரத்திற்காக போ...
கொங்குத் தென்றல்: தமிழக விடுதலை வீரர்கள் இந்திய சுதந்திரத்திற்காக போ...: மரியாதைக்குரியவர்களே, வணக்கம். இந்திய விடுதலைக்காக போராடிய தமிழக வீரர்கள் பற்றி அறிந்து கொள்வோம் இதோ தங்களது பார்வைக்காக த...
Saturday, August 1, 2015
Tuesday, July 28, 2015
Avargal Unmaigal: அப்துல் கலாமை கெளரவிக்க தமிழக அரசு இதையாவது செய்யு...
Avargal Unmaigal: அப்துல் கலாமை கெளரவிக்க தமிழக அரசு இதையாவது செய்யு...: அப்துல் கலாமை கெளரவிக்க தமிழக அரசு இதையாவது செய்யுமா?
Tuesday, April 7, 2015
கசியும் மௌனம்: சிங்கப்பூர் பயணம் - 7
கசியும் மௌனம்: சிங்கப்பூர் பயணம் - 7: சிங்கப்பூரில் யாரை எப்போது சந்தித்தாலும் சுற்றிப்பார்த்த இடங்கள் குறித்த அவர்களின் பட்டியலில், விசாரிப்புகளில் தவறாமல் இடம்பெறுவது நூ...
Monday, March 16, 2015
ஐன்ஸ்டைன்.
ஐன்ஸ்டைன்....
இவரைப் பத்தி எனக்கு ரொம்பலாம் தெரியாது. ஆனா, இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தனியொரு மனிதனா அறிவியல் உலகையே தன்னோட சார்பியல் கோட்பாட்டினால் அசைத்துப் பார்த்தவர். மார்ச் 14 இவரோட பிறந்தநாள். எனக்கு என்னோட பிறந்தநாளே ஞாபகத்துல இருக்காது. அடுத்தவங்க பிறந்தநாளுன்னா சுத்தம்.
மதிப்பிற்குரிய ஐயா, Narayanan Seshadry இவரைப்பத்தி ஒரு பதிவு போடுங்கன்னு சொல்லிருக்காரு. ஐன்ஸ்டைனோட சொந்த வாழ்க்கையைப் பத்தி எனக்குத் தெரியாது. தெரிஞ்சுக்குறதுலயும் அவ்ளோ ஆர்வம் இல்லை. ஆனா, அவரோட கண்டுபிடிப்புகள் ஆய்வுகள் குறித்து எனக்கு ஆர்வம் அதிகம். அவரோட வார்த்தைகளா அவரைப்பத்தி சொன்னது ஒன்னு இருக்கு அது எனக்கு ரொம்பப் பிடிச்ச வாசகம்.
I have no special talent. I am only passionately curious.
இது தன்னடக்கம். ஆனா, மிக எதார்த்தமான உண்மை. மனிதர்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில சிறப்பாத்தான் பிறக்குறாங்க. எல்லாமே சிறப்பா இருக்கும்போது தனிச்சிறப்புன்னு எதைச் சொல்ல முடியும்? ஆனா, யார் தன்னோட சிறப்பை உணர்ந்து அதைச் சரியா வெளிப்படுத்துறாங்களோ அவங்களே சிறப்பானவங்கன்னு மத்தவங்க சொல்றாங்க, ஏத்துக்கவும் செய்யுறாங்க.
இவர் தன்னை உணர்வுந்துதலுடன் கூடிய ஒரு ஆர்வமுடையவன் என்கிறார். எதையும் துறுதுறுவென்று அறிந்து கொள்ளும் ஆர்வமுடையவர் என்கிறார். இதே குணத்தைதான் நான் என்னிடமும் உணர்ந்திருக்கிறேன். அதனால்தான் இந்த மேற்கோள் எனக்குப் பிடித்திருக்கின்றது. அவரையும் எனக்கு இன்னும் சற்று நெருக்கமாக உணர முடிந்திருக்கின்றது.
சரி, விஷயத்திற்கு வருவோம்.
ஐன்ஸ்டைனின் காலத்துல, கடந்த மூன்று நூற்றாண்டுகளா உலகம் நம்பிக்கிட்டு இருந்த, ஒரு இயற்பியல் விதியை ரொம்ப அசால்ட்டா அடாசுன்னு சொல்லாமச் சொன்னாரு. அது என்னன்னா ஈர்ப்பு விசையைக் குறித்த பார்வை. நமக்கெல்லாம் தெரியும். நியூட்டன்தான் ஈர்ப்பு விசையைக் கண்டு பிடிச்சாருன்னு. அவரு என்ன சொன்னாருன்னா, நிறையுள்ள எல்லாப் பொருளுக்கும் ஈர்ப்பு விசை இருக்கும். அது கண்ணுக்குத் தெரியாது. அந்தப் பொருளைச் சுத்தி நிறையைப் பொறுத்து ரொம்ப தூரத்துக்குப் பரவி இருக்கும்.
அதுனாலதான் சூரியன் பூமியை, மற்ற கிரகங்களை இழுத்துப் பிடிச்சு வச்சுருக்குன்னாரு. அதுக்கு சமன்பாடுகள்லாம் கூட தந்தாரு. எல்லாமே சரியாத்தான் இருந்துச்சு. ஆனா, ஐன்ஸ்டைன் வர்ற வரைக்கும்தான்.
அவர் கொடுத்த சமன்பாடெல்லாம் ஈர்ப்பு விசையோட நிகழ்வுக்குப் பின்னால வர்ற மதிப்புகளைத் தந்துச்சு. ஆனா, ஈர்ப்பு விசை எப்படிச் செயல்படுதுன்னு நியூட்டன் சரியா விளக்கவில்லை.
நியூட்டன் சொன்ன ஈர்ப்பு விசை சரிதான். ஆனா, அந்த விசை நேரடியா இன்னொரு பொருளைப் பிடிச்சு இழுத்து வச்சுருக்கலைன்னாரு. அப்புறம் என்ன ஆள்விட்டா பிடிச்சு வச்சுருக்குன்னா.... இருங்க அவசரப்படாதீங்க. நமக்கே தெரியும், தொலை தூரத்துல இருக்குற நிலாவை விலகிப் போயிறாம நம்ம பூமி இழுத்துப் பிடிச்சு வச்சுருக்கு. நிலாவும் நம் பூமியில நழுவி விழுந்துக்கிட்டுதான் இருக்கு. ஆனா, அது நழுவி விழுகுற வேகமும், முன்னோக்கி நகர்ற வேகமும் சமன் படுறதால அது பூமி மேல விழுகாம பூமியைச் சுத்தி வருது.
ஆனா, சர்ர்ர்ருனு... பூமியில இருந்து செங்குத்தா நம்மளால ஒரு ராக்கெட்டை எடுத்துக்கிட்டு, பூமியோட ஈர்ப்பு விசையில இருந்து தப்பிச்சு விண்வெளிக்குப் போயிற முடியுது. அதுக்கு ஈர்ப்பு விசையை விட கொஞ்சம் அதிகமான விசை கொடுத்தா போதும். எஸ்கேப் வெலாசிட்டி(Escape Velocity)ன்னு சொல்வாங்க.
நிறையுள்ள நிலாவையே இழுத்து வச்சுக்கிட்டு பலமான விசையா தெரிஞ்ச பூமியோட ஈர்ப்பு விசை, தன்கிட்ட இருந்து ஒரு ராக்கெட் தப்பிச்சுப் போறதை இழுத்துப் பிடிச்சு வச்சுக்க முடியாத அளவுக்கு பலவீனமான விசையாவும் இருக்கு. ஆக, ஈர்ப்பு விசையோட எல்லை பெருசு, சக்தி குறைவு.
ஐன்ஸ்டைன் என்ன சொல்றாருன்னா... பூமியோ மற்ற கிரகங்களோ சூரியனையோ நட்சத்திரத்தையோ சுத்தி வர்றது நேரடி ஈர்ப்பு விசையாலன்னு சொல்ல முடியாது. அவற்றோட ஈர்ப்பு விசை வெளியை வளைச்சு வச்சுருக்கு, அந்த வளைவுகள்ல சிக்கிக்கிட்ட பூமி மாதிரியான கோள்கள் வேற வழியில்லாம அதுல சுத்திக்கிட்டு இருக்குதுங்கன்னாரு.
எல்லோரும் சிரிச்சாங்க. வெளியையாவது வளைக்கிறதாவது... தலைவருக்கு நிச்சயம் புத்தி பேதலிச்சுப்போச்சுன்னுதான் நெனச்சுருப்பாங்க. வெளின்னா என்ன, அது எப்படி இருக்கும், அதைக் கையால பிடிக்க முடியுமா, இல்லை எதுலயாச்சும் பிடிச்சு வச்சுதான் பாக்க முடியுமா? அதைப் போயி எப்படி வளைக்க முடியும்?
அதைப்பத்தி யோசிக்கிறதுக்கு முன்னாடி, ஐன்ஸ்டைன் சொன்னதுக்கு ஒரு உதாரணம் காட்டி புரிஞ்சுக்க முயற்சி செய்வோம். நம்ம கிராமத்துல மாட்டுவண்டி பாத்துருப்போம். கிராமத்து மண்சாலைகளையும் பாத்துருப்போம். ஒரு நாளு நல்லா மழை பேஞ்சு அந்தப் பாதை ஈரமா இருக்குன்னு வச்சுக்குவோம். அதுல ரெண்டு மூணு மாட்டு வண்டிங்க போயிருக்குன்னும் வச்சுக்குவோம்.
அந்த மாட்டு வண்டிகளோட சக்கரத்தோட தடம் அந்தச் சாலையில பதிஞ்சு போயிருக்குமா... அதுக்கப்பறம் மழை நின்னு வெயில் சுள்ளுனு ஒரு ரெண்டு நாளு அடிச்சு அந்தப் பாதை நல்லாக் காய்ஞ்சு போயிருச்சுன்னு வைங்க. அந்த வண்டிச்சக்கரத் தடங்களும் நல்லா காய்ஞ்சு இறுகி கெட்டியா இருக்கும்.
இப்ப, நாம ஒரு சைக்கிள்ல அந்தப் பாதையில வர்றோம். நேரா வந்துக்கிட்டு இருக்குற சைக்கிள் டயர் அந்த வண்டிச் சக்கரத்தோட தடம் எதுக்குள்ளயாச்சும் சிக்குச்சுன்னா, அந்த தடத்தோட வழியிலதான் இழுத்துக்கிட்டு போகும். அந்தத் தடம் முடிஞ்சு குறுக்கால வேற ஒரு தடம் இணைஞ்சு இருந்துச்சுன்னா... டயர் அந்தத் தடத்துக்குள்ள இழுத்துக்கிட்டு போகும்.
அது மாதிரிதான் சூரியனோ, பூமியோ, எந்தவொரு நிறையுள்ள பொருளும், அதனதன் நிறைக்கேற்ப தன்னைச் சுத்தியுள்ள வெளியை வளைச்சு வச்சுருது. அந்த வளைவுக்குள்ள வந்து மாட்டிக்கிற மத்த கோள்களோ பொருட்களோ வேற வழியில்லாம அந்த வளைவுலேயே சுத்தி வருதுன்னு சொன்னாரு.
அதாவது நியூட்டன் என்ன சொல்றாருன்னா... ஒரு கல்லைக் கயிற்றில் கட்டிச் சுத்துறது மாதிரி, ஈர்ப்புவிசை இருக்குன்னாரு. கல்லை ஈர்ப்பு விசைங்குற கயிறு இழுத்துப் பிடிச்சுக்கிட்டு இருக்குங்குறாரு.
ஐன்ஸ்டைன் என்ன சொல்றாருன்னா... ஒரு குண்டு சட்டிக்குள்ள கோலிக்குண்டைப் போட்டுச் சுத்துறா மாதிரிங்குறாரு. அதாவது குண்டுச்சட்டி வளைஞ்சு இருக்கு... அதுனாலதானகோலிக்குண்டும் வளைவா சுத்துதுங்குறாரு.
அவங்க ரெண்டு பேரும் அப்டீயே இருக்கட்டும். வெளி வளைஞ்சுருக்கா இல்லையா? அந்தப் பிரச்சனைக்கு வருவோம். இதைத்தான் நான் சொல்ல வந்ததும். நம்மளைப் பொறுத்த வரை வெளிங்குறது ஒரு பொருளே இல்லை. சூன்யம்னு சொல்வோம். அப்டீன்னா ஒன்னுமே இல்லை. ஒன்னுமே இல்லாதது எப்டீங்க வளையும்னு கேட்டா... வளையுதே... அதை நிரூபிக்கவும் செஞ்சுருக்காங்களே.
நமக்கெல்லாம் தெரியும் ஒளி எப்பவும் நேர்கோட்டுலதான் பயணிக்கும். கண்ணாடி மாதிரி ஒரு பொருள்ல பட்ட பிரதிபலிக்கவோ விலகவோ செய்யும். காத்துல பயணிச்சுக்கிட்டு இருக்குற ஒளி, திடீர்னு தண்ணிக்குள்ள நுழையும்போது விலகல் அடையும்.
அதே மாதிரி (விண்)வெளியில பயணம் செஞ்சுக்கிட்டு இருக்குற ஒளி நேர்கோட்டுலதானே வரனும். எங்கயாச்சும் வெளி வளைஞ்சு இருந்துச்சுன்னா... அங்கே ஒளியும் வளையத்தானே வேணும். ஏன்னா, அதுக்கு போறதுக்கு வேற வழி இல்லை. வளைஞ்ச வெளியிலதான் போயாகனும். இதைத்தான் ஐன்ஸ்டைன் சொல்றாரு.
சொன்னா போதுமா, நிரூபிக்க வேணாமா. நிரூபிச்சாங்க.
சூரியன் தன்னைச் சுத்தி இருக்குற வெளியை வளைச்சுருக்குல்ல?
ஆமா.
அப்டீன்னா, சூரியனுக்குப் பின்னாடி இருக்குற ஒரு நட்சத்திரத்தோட ஒளி பூமிக்கு நேரா வராம கொஞ்சம்
வளைஞ்சுதானே வரனும்...
வளைஞ்சுதானே வரனும்...
ஆமா. வளைஞ்சுதான் வருது.
எப்டீ?
அது 1919ம் ஆண்டு, மே மாதம் 29ம் தேதி சூரியகிரகணம். அன்றைக்கு ஆர்தர் எடிங்டன் என்பவர் ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரை ஓரமாக இருக்கும் பிரின்ஸிபி (Principe) என்ற தீவில் இருந்து நம் சூரியகுடும்பத்திற்கு அண்மையில் உள்ள Hyades விண்மீன் திரளில் உள்ள நட்சத்திரத்தின் ஒளியைப் பதிவு செய்கிறார்.
சூரியகிரகணத்தின் போதுதான், வளிமண்டலத்தில் சூரிய ஒளியின் தொந்தரவு இல்லாமல், நட்சத்திரங்களின் ஒளியைக் காண முடியும். அப்படி நோக்குகையில் , ஹயேடிஸ் திரளில் உள்ள ஒரு நட்சத்திரம் நம் சூரியனுக்குப் பின்னே இருந்திருக்க வேண்டும். அந்நேரத்தில் அதனை எடிங்டன் அவர் இருந்த இடத்தில் இருந்து பார்த்திருக்க முடியாது. அதாவது அதிலிருந்து வரும் ஒளியை அவர் பார்த்திருக்க முடியாது.
ஆனால், சூரியன் தன்னைச் சுற்றி உள்ள வெளியை வளைத்து வைத்திருப்பதால், அந்த ஒளி வளைந்த வெளியில் பயணம் செய்து நம் எடிங்டனின் பார்வையில் பட்டிருக்கின்றது. இது மிக நுண்ணிய அளவுதான். அதாவது 1.75 ஆர்க்செகண்ட்தான்.
இவர் மட்டுமல்ல, அதே சமயத்தில் வடக்கு பிரேசிலில் உள்ள Sobral என்னும் ஊரில் இன்னொரு குழுவும் அந்த நட்சத்திரத்தின் இருப்பையும் ஒளியையும் பதிவு செய்தது. ஒப்பு நோக்குகையில் எடிங்டன் கண்டறிந்த வளைவு 1.61 ஆர்க் செகண்ட் வந்தது. (இதில் ±0.30 வேறுபாடு வரலாம்)
ஆக, எதிர்பார்த்தபடி ஒளி வளைந்து வருவதால், வெளி வளைகிறது என்பது நிரூபணம் செய்யப்பட்டது. அதன் பின்னர் ரேடியோ தொலைநோக்கிகள் மூலமாக, கணிணிக் கணக்கீடுகள் மூலமாகத் துல்லியமாக வெளி வளைகின்றது, எவ்வளவு வளைகின்றது போன்றவற்றையெல்லாம் கணித்து விட்டார்கள்.
அந்த வளைவை ஈர்ப்பு வில்லை (Gravitational Lens) என்பார்கள்.
நம்ம கவிஞர்கள், வானத்தை வளைக்கவான்னு கவித்துவமா காதல் கவிதைகள் எழுதிக்கிட்டு இருக்க, இவரு தனியாளா கணக்கீடுகளை வச்சு... நீங்க யாரும் வளைக்க வேணாம், அதுவே வளைஞ்சு வளைஞ்சுதான் இருக்குன்னு சொல்லிட்டாரு.
இப்ப சொல்லுங்க... இவரு மாமேதைதானே...? அதான் எனக்கு இவரைப் பிடிச்சுருக்கு.
ஆக்கமும், படைப்பும் : முகனூல் நண்பர் பாபு Pk
Subscribe to:
Posts (Atom)
